Elon Musk Action Over Twitter: எலான் மஸ்குக்கு செக் வைத்த மார்க்.. பதறியடித்து சுதாரித்த எலான் மஸ்க்.. காரணம் இதோ.!

சர்வதேச அளவில் கோடிக்கணக்கான பயனர்களை தினமும் நிர்வகித்து வரும் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் அடுத்தகட்ட மோதலை தொடங்கிவிட்டன.

Elon Musk Action Over Twitter: எலான் மஸ்குக்கு செக் வைத்த மார்க்.. பதறியடித்து சுதாரித்த எலான் மஸ்க்.. காரணம் இதோ.!
Threads & Twitter Logo (Photo Credit: Pixabay)

ஜூலை 03, தொழில்நுட்பம் (Technology News): ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்கின் கைக்கு சென்றதில் இருந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த புளூ டிக் அங்கீகாரம், பணத்திற்கு கொண்டு வரப்பட்டது.

நேற்று முன்தினம் எலான் மஸ்க், ட்விட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்து இருந்தார். அதாவது, ட்விட்டர் பயனர்களின் புளூ டிக் பெற்றவர்கள் நாளொன்றுக்கு 6 ஆயிரம் இடுகைகளை பார்க்கலாம்.

சாதாரண பயனர்கள் 600 பதிவுகளை பார்க்கலாம், புதிய பயனர்கள் 300 பதிவுகளை மட்டுமே பார்க்கலாம் என்று தெரிவித்தார். இது உலகளவில் கடும் எதிர்ப்பை சந்தித்து, ட்விட்டரை விட்டு விரைந்து அனைவரும் வெளியேறிவிடலாம் என்ற எண்ணத்திற்கு சென்றுவிட்டனர். Guwahati Suicide: அந்தரங்க போட்டோ, விடியோவை வெளியிட்ட காதலன்; மனமுடைந்து தூக்கில் தொங்கிய காதலி.!

Twitter Blue (Photo Credit: Wikipedia Commons)

இதனால் நிலைமையை உணர்ந்துகொண்ட எலான் மஸ்க், மேற்கூறிய பிரச்சனைக்கு விரைவில் சுமூகமான முறையில் தீர்வு காண்கிறேன் என தெரிவித்துள்ளார். இவரின் அறிவிப்புக்கு முக்கிய காரணமாக, முகநூலின் தலையீடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதாவது, முகநூல் நிறுவனம் Threads என்ற செயலியை ட்விட்டருக்கு மாற்றாக அறிமுகம் செய்துள்ளது. இது ட்விட்டர் நிர்வாக தரப்பை பதறவைத்துள்ளதை உறுதி செய்யும் பொருட்டு, எலான் மஸ்க் தனது அறிவிப்பில் இருந்து பின்வாங்கி இருக்கிறார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement