Elon Musk / Donald Trump (Photo Credit : @ANI X)

ஜூன் 06, அமெரிக்கா (World News): அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அமெரிக்க அரசின் செலவீனங்கள் குறைப்பு தொடர்பான நடவடிக்கைகளும் அதிகம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல அரசு நடவடிக்கைக்கு ஆலோசகர் குழுவாக அமைக்கப்பட்ட டாஜ் துறையில், தலைமை ஆலோசகராக டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் எலான் மஸ்க் செயல்பட்டு வந்தனர். இவர்கள் இருவரும் அமெரிக்க அரசுக்கு நிதி திட்டங்கள் மற்றும் எதிர்கால செயல்பாடு குறித்த முடிவுகளை எடுத்து வருகின்றனர். இதனால் அமெரிக்க அதிபர் மற்றும் எலான் இடையே நெருக்கமான உறவு நீடித்து வரும் வருகிறது. இவர்களின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடைபெற்ற வருகின்றன.

எலான் மஸ்க் எதிர்ப்பு :

இந்நிலையில், செனட் சபையில் பொருளாதார செலவினங்களை மாற்றி அமைக்கும் வகையிலான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு டிரம்ப் அதிபராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட வரி சீர்திருத்தம், வரிச்சலுகை தொடர்பான முக்கிய அம்சங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கான வரிச்சலுகை ரத்து தொடர்பான விஷயங்கள் இடம்பெற்றன. இந்த விஷயத்தால் எலான் மஸ்க் ஆத்திரமடைந்ததாக கூறப்படும் நிலையில், மசோதாவுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். US Visa: 12 நாட்டவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை.. அதிரடி காட்டிய டிரம்ப்.. லிஸ்ட் இதோ.! 

டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு :

இதனால் . அவர் நன்றி அற்றவராக இருக்கிறார் என்று எலான் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எலான் மஸ்க் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.