Elon Musk / Donald Trump (Photo Credit : @ANI X)

ஜூன் 08, அமெரிக்கா (World News): அமெரிக்காவில் தற்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், டெஸ்லா நிறுவனத்தின் இயக்குனருமான எலான் மஸ்க்கும் நெருங்கிய கூட்டாளிகள் போல செயல்பட்டு வந்தனர். இதனிடையே அமெரிக்க அரசு கொண்டுவரும் வரி மற்றும் செலவு மசோதா விஷயத்தில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் போக்கு இருவரின் நட்பிலும் விரிசலாக விழுந்த நிலையில், இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். US Visa: 12 நாட்டவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை.. அதிரடி காட்டிய டிரம்ப்.. லிஸ்ட் இதோ.! 

விரைவில் புதிய கட்சி?

சமூக ஊடகங்கள் வாயிலாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பதிவுகளும் வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே எலான் மஸ்க் தனது வலைதளபக்கத்தில் அமெரிக்காவின் நடுத்தர மக்களை பிரதிநிதித்துவப்படுத்த புதிய கட்சி தேவையா? என்று கேட்டுள்ளார். இந்த விஷயத்துக்கு 80% ஆம் என்ற வாக்குகள் கிடைக்கவே, தற்போது அந்த விஷயம் பேசு பொருளாகி இருக்கிறது. மேலும் அவர் புதிய கட்சி ஒன்றை தொடங்க இருப்பதாகவும், அந்த புதிய கட்சிக்கு தி அமெரிக்கா பார்ட்டி என்ற பெயர் வைப்பதாகவும் அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதிய கட்சியின் பெயரை அறிவித்த எலான் மஸ்க் :

இந்த விஷயம் குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவில் தற்போதைய நிலவரம் தொடர்பாக கருத்துக்கணிப்பு கேட்டிருந்தேன். அதன்படி நடுத்தர மக்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த புதிய அரசியல் கட்சி தேவை என்று கூறியுள்ளார்கள். இதனால் தி அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய கட்சியை தொடங்குகிறேன் என்று கூறியுள்ளார்.

புதிய கட்சி குறித்த அறிவிப்பு :

எலான் மஸ்க்கின் பதிவு :