ஜூலை 09, வாஷிங்டன் (World News): உலகளவில் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க் (Elon Musk), கடந்த 2022ஆம் ஆண்டு 'டுவிட்டர்' வலைதளத்தை வாங்கினார். பின்னர், அதற்கு 'எக்ஸ்' என்று பெயர்மாற்றம் செய்தார். இதனையடுத்து, லிண்டா யக்காரினோ (Linda Yaccarino) என்ற பெண்மணியை எக்ஸ் வலைதளத்தின் சிஇஓ ஆக அவர் நியமனம் செய்தார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இப்பதவியில் இருந்த லிண்டா யக்காரினோ, இன்று (ஜூலை 09) திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். Sabih Khan Apple COO: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி.. இந்தியரான சபிஹ் கான் தேர்வு..!
எக்ஸ் சிஇஓ ராஜினாமா:
இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், எலான் மஸ்க் மற்றும் நான் முதன்முதலில் X-க்கான அவரது தொலைநோக்குப் பார்வையைப் பற்றிப் பேசியபோது, இந்த நிறுவனத்தின் அசாதாரண பணியை நிறைவேற்றுவது வாழ்நாள் முழுவதும் கிடைத்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை நான் அறிந்தேன். பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாத்தல், நிறுவனத்தையே மாற்றுதல் மற்றும் X-ஐ அனைவருக்கமான செயலியாக மாற்றுதல் போன்ற பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காக நான் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறேன்.
லிண்டா யக்காரினோ வெளியிட்ட அறிக்கை:
எக்ஸ் குழுவைப் பற்றி நான் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறேன். நாங்கள் ஒன்றாகச் செய்துள்ள வரலாற்று வணிக திருப்பம் குறிப்பிடத்தக்கது ஆகும். எங்கள் பயனர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்கும், விளம்பரதாரர் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் தேவையான முக்கியமான ஆரம்பகாலப் பணிகளுடன் நாங்கள் தொடங்கினோம். சமூகக் குறிப்புகள் போன்ற புதுமையான கண்டுபிடிப்புகளிலிருந்து, விரைவில், X Money, மிகவும் பிரபலமான குரல்கள் மற்றும் உள்ளடக்கத்தை தளத்திற்குக் கொண்டுவருவதற்கும் இக்குழு இடைவிடாமல் உழைத்துள்ளது. இப்போது, எக்ஸ் ஏஐ உடன் ஒரு புதிய அத்தியாயத்தில் தொடங்கியுள்ளது. X என்பது அனைத்து குரல்களுக்கும் ஒரு டிஜிட்டல் தளமாகும். எங்கள் பயனர்கள், வணிக கூட்டாளர்கள் மற்றும் உலகின் மிகவும் புதுமையான குழுவின் ஆதரவு இல்லாமல் நாங்கள் அதை அடைந்திருக்க முடியாது. நீங்கள் தொடர்ந்து உலகை மாற்றும்போது நான் உங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்துவேன். எப்போதும் போல, எக்ஸ்-இல் உங்களைச் சந்திப்பேன் என அவர் பதிவித்துள்ளார்.