Sundar Pichai Smartphone: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உபயோகம் செய்யும் ஸ்மார்ட்போன் என்ன தெரியுமா?.. விபரம் உள்ளே., ஆச்சரியப்பட்டு போவீங்க.!

உலகின் ஒவ்வொரு மூலையிலும் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் சுந்தர் பிச்சையின் செல்போன் குறித்த ரகசியம் தெரியவந்துள்ளது.

Google Pixel 7 Pro | Google CEO Sundar Pichai (Photo Credit: Amazon / Wikipedia)

மே 17, கலிபோர்னியா (World News): சர்வதேச அளவில் மிகப்பெரிய வாடிக்கையாளர் மையத்தை கொண்டது கூகுள் நிறுவனம். இந்நிறுவனத்தில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் உலகளவில் வேலை பார்த்து வருகின்றனர். கூகுளை 1 பில்லியன் பயனர்கள் உபயோகம் செய்கின்றனர்.

இந்தியாவை பொறுத்தமட்டில் 500 மிலில்யன் பயனர்கள் தொடர்ந்து கூகுளை உபயோகம் செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் சுந்தர் பிச்சை சென்னையை சேர்ந்த தமிழர் ஆவார். தமிழ் இளைஞர் தனது முயற்சியால் இன்று உலகளவில் கவனிக்கப்படும் இடத்தில் முக்கிய பணியை ஆற்றி வருகிறார். SC on Love Marriages and Divorces: காதல் திருமணத்தால் அதிகரித்த விவாகரத்துகள் – டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து.!

இந்த நிலையில், சுந்தர் பிச்சை உபயோகம் செய்யும் செல்போன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர் சமீபத்தில் யூடியூப் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தான் உபயோகம் செய்யும் ஸ்மார்ட்போன் குறித்த விஷயத்தை பகிர்ந்துகொண்டார்.

அதன்படி, சுந்தர் பிச்சை கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருகிறார். கூகுள் சமீபத்தில் சந்தையில் அறிமுகம் செய்த பிக்சல் 7 ப்ரோ செல்போனை உபயோகம் செய்யும் நிலையில், சாம்சங் கேலக்சி மற்றும் ஐபோன் போன்றவற்றையும் ஆய்வுக்காக பயன்படுத்தி வருகிறார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement