நவம்பர் 03, காத்மாண்டு (World News): வடகிழக்கு நேபாளத்தின் யாலுங் ரி சிகரத்தில் இன்று (நவம்பர் 03) ஏற்பட்ட பனிச்சரிவில் (Avalanche) சிக்கி வெளிநாட்டு மலையேறுபவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 5,630 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தின் அடிப்படை முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டதில் இருந்து மேலும் 4 பேர் காணாமல் போனதாக காத்மாண்டு செய்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குழந்தைகள் கண்முன் தாயை கொன்று ரத்தத்தை துடைக்கச் சொன்ன தந்தை.. உயிர் போகும் வரை நடந்த கொடூரம்.!
7 பேர் பலி:
யாலுங் ரி சிகரம் பாக்மதி மாகாணத்தின் டோலாகா மாவட்டத்தின் ரோல்வாலிங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இறந்தவர்களில் 3 பேர் அமெரிக்க குடிமக்கள், கனடாவை சேர்ந்த ஒருவர், இத்தாலியன் ஒருவர் மற்றும் 2 நேபாள நாட்டவர்கள் அடங்குவர் என்று மாவட்ட காவல் அலுவலக துணைக் காவல் கண்காணிப்பாளர் ஞான் குமார் மஹதோ தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.