நவம்பர் 20, சென்னை (Technology News): ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வரும் பலரும் கூகுள் மேப் செயலியை கட்டாயம் பயன்படுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர். புதிய ஊர்களுக்கு சென்றாலும், சொந்த ஊரிலேயே ஏதேனும் ஒரு முகவரியை தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை யாரிடமும் எந்த விதமான வழியும் கேட்காமல் பயணிக்க கூகுள் மேப் பயன்படுகிறது. பல சிறப்பம்சங்களைக் கொண்ட கூகுள் மேப்பில் போட்டி தன்மையை சமாளிக்கும் வகையிலும் கூகுள் அவ்வப்போது பல அப்டேட்டுகளை வெளியிடுவது வழக்கம். Gujarat Ambulance Fire: பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்.. பச்சிளம் குழந்தை, மருத்துவர் உட்பட 4 பேர் மரணம்.!
கூகுள் மேப்பின் புதிய அப்டேட்டுகள்:
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூகுள் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டது. அதன்படி கூகுளின் ஜெமினி ஏஐயுடன் கூகுள் மேப் தற்போது ஒருங்கிணைந்து பணியாற்றுகிறது. இதனால் பயனர்கள் தங்களது செல்போனை தொடாமலேயே நிகழ நேர உரையாடலில் ஈடுபடலாம். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கூகுள் மேப் நிறுவனமும் இணைந்து சாலையில் ஏற்படும் போக்குவரத்து தடை, மாற்றுப் பாதை, கட்டுமானம் குறித்த அப்டேடுகளையும் துல்லியமாக வழங்குகிறது.
விபத்து ஏற்படும் பகுதிக்கு முன்கூட்டியே எச்சரிக்கை:
இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்காக புதிய அவதார் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில நகரங்களில் இருக்கும் பயனர்கள் கூகுள் மேப் மூலமாக நேரடியாக மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவும் செய்ய முடியும். விபத்து ஏற்படும் பகுதிகளை நெருங்கும் போது பயனர்களை கூகுள் மேப் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.