Mexico Alien Dead Bodies: மெக்சிகோ அரசு காட்சிப்படுத்திய ஏலியன் உடல்கள் உண்மையா? : வெளியான பரிசோதனை முடிவுகள்.!
பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முடிவில் ஏலியன்கள் ஒற்றை எலும்பு கொண்டதாகவும் அவற்றின் உடல்களில், மனிதக் கூறுகள் எதுவும் இல்லை என்றும் மெக்ஸிகோ கடற்படையின் உடல்நல அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறை செயலாளர் ஜோஸ் சல்ஸ் பெனிடெஸ் தெரிவித்திருக்கிறார்.
செப்டம்பர் 20, மெக்சிகோ (Technology News): பெரு நாட்டில் உள்ள குஸ்கோ நகரில் இருந்து இரண்டு சிறிய அளவிலான வேற்றுகிரகவாசிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலங்கள் மெக்சிகோவில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ அதிகாரிகள் முன்பு வெளியிடப்பட்டு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.
மெக்சிகோ அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஏலியன் உடல்களில் மண்டை ஓடுகளுக்கான ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த திங்கட்கிழமை மெக்சிகோவின் பத்திரிகையாளர், ஜெயிம் மவுஸனின் (Jaime Maussan) யூடியூப் சேனலில் ஆராய்ச்சியாளர்கள் ஏலியன் மாதிரிகளில் மேற்கொண்ட தொடர்ச்சியான பரிசோதனைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது. ICC World Cup 2023 Anthem Song: உலகக்கோப்பை 2023-க்கான பாடலை அதிகாரபூர்வமாக வெளியிட்டது ஐசிசி..! லிங்க் உள்ளே.. கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்.!
இறுதியாக தற்போது, மெக்சிகன் கடற்படையின் உடல்நல அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறை செயலாளர் ஜோஸ் சல்ஸ் பெனிடெஸ் (Jose Zalce Benitez), பரிசோதனைகளின் முடிவில் ஏலியன் உடல்களில் மனிதக் கூறுகள் இல்லை என்றும், அவை ஒற்றை எலும்பு கொண்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இரண்டு ஏலியன் உடல்களில் ஒன்று உயிர்ப்புடன் இருப்பதாகவும், மேலும் அது கருவுற்று இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. கைகால்களோடு மனித உடல் போல் தோன்றும் இந்த ஏலியன்களுக்கு பற்கள் எதுவும் இல்லாமல் மெலிதான மற்றும் பலமான எலும்புகள் உள்ளதாக தெரிகிறது. அவற்றின் உடல்களில் உலகின் மிக அரிய வகை தாதுக்களான கேட்மியம் மற்றும் ஆஸ்மியம் காணப்பட்டிருக்கிறது.
இந்த மாதிரிகள் எதுவும் பூமியின் பரிணாம வளர்ச்சிக்கு தொடர்புடையது இல்லை என்றும், அவை பாசிகளில் இருந்தும், புதை படிவங்களில் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டதாக இருக்கும் என்று மவுஸான், மெக்சிகோ அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளித்தார்.