ஜூலை 06, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஸ்டெம் செல் சிகிச்சை & பரிசோதனைக்காக 2352 நோயாளிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவர்களில் 741 பேர் உயிரிழந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2017 வரை மொத்தமாக 741 பேர் உயிரிழந்துள்ளனர். இது அனைத்தும் சட்டவிரோதமான பரிசோதனை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்தலாமா?.. இந்த விஷயத்தையெல்லாம் கவனியுங்க.!
தோல்வியில் முடிந்த மாற்று அறுவை சிகிச்சை?
பரிசோதனை மேற்கொண்டவர்களில் சுமார் 96% நோயாளிகள் ஸ்டெம் மாற்று அறுவை சிகிச்சையில் தோல்வி அடைந்தவர்களாக CAG அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவர்களில் 569 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அது தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் அவர்களின் மரணம் ஏற்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் விளைவாக எடுத்துக்கொண்ட சிகிச்சையால் உடல்நல பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.