US Fighter Jet Crash (Photo Credit : @aviationbrk X)

ஜூலை 31, கலிபோர்னியா (World News): அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணம் லெமூர் கடற்படை விமான நிலையத்தில் அமெரிக்க கடற்படையின் எப்-35 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை தொடர்ந்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் விமானியை பத்திரமான மீட்டனர். மாலை 06:30 மணியளவில் ஏற்பட்ட இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். AI Job Impact List: 40 வேலைகளுக்கு AI வைத்த ஆப்பு.. உங்க வேலை என்ன? கவனமாக இருங்க.. லிஸ்ட் இதோ..! 

விமானம் விழுந்து நொறுங்கி விபத்து :

விபத்திற்குள்ளான இந்த விமானம் விமானிகள் மற்றும் விமான குழுவினருக்கு பயிற்சியளிக்க உபயோகிக்கப்பட்ட நிலையில், இன்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென விழுந்து நொறுங்கியது. சுமார் 100 டாலர் மில்லியன் மதிப்புள்ள இந்த விமானம் செங்குத்தாக தரையிறங்கும் தன்மை கொண்டதாகவும் இருந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள எய்ல்சன் விமானப்படை தளத்தில் எப்-35 ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது.

உதவிய உள்ளூர் மக்கள் :

நல்வாய்ப்பாக இந்த 2 விபத்திலும் விமானிகள் உயிர்தப்பினர். விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் புகைமூட்டம் எழுவதை கண்ட உள்ளூர் மக்களும் மீட்பு படையினருக்கு உதவியுள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக மோசமான வானிலை மற்றும் குறைந்த எரிபொருள் காரணமாக இந்த ரக விமானம் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போர் விமான விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் :