IPL Auction 2025 Live

Pay To Tweet: எக்ஸ் தளத்தில் புதிதாக சேர போறீங்களா.. அப்போ இனி ஒவ்வொரு பதிவுக்கும் கட்டணம்..!

எக்ஸ் தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவிட இனி கட்டணம் செலுத்த வேண்டும்.

Elon Musk X Platform (Photo Credit: Twitter)

ஏப்ரல் 16, சென்னை (Technolgy News): கடந்த சில வருடங்களுக்கு முன்பு எலன் மஸ்க் ட்விட்டர் (Twitter) நிறுவனத்தினை வாங்கினார். தொடர்ந்து அந்த இணையதளத்தின் பெயரை எக்ஸ் (X) என்று மாற்றினார். அவர் அந்த சமூக வலைதளத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருந்தே இருந்தார். இருப்பினும் பயனர்களின் எண்ணிக்கையானது அதில் அதிகரித்துக் கொண்டே தான் வந்தது. அதுமட்டுமின்றி வெரிஃபைடு பயனாளிகளுக்கு வருமானத்தின் சில பகுதிகளை பகிர்ந்து கொடுகின்றார். இதனால் பல பயனாளர்கள் எக்ஸ தளத்தின் மூலம் வருவாய் பெற்று வருகின்றனர். Cannabis Atrocity: கஞ்சா போதையில் அதிகாரிகளை உறவுக்கு அழைத்த பெண்; நிர்வாணமாக பரபரப்பு செயல்.!

இந்நிலையில் எலன் மஸ்க் ஒரு அதிரடியான மாற்றத்தினை கொண்டு வந்துள்ளார். அதாவது இனிமேல் புதிதாக சேரும் பயனர்கள், கருத்துக்களை பதிவிடுவதற்கு, லைக் செய்வதற்கு, புக் மார்க் மற்றும் பதிவுகளுக்கு பதிலளிப்பதற்கு தனியே கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார். முதல் கட்டமாக பிலிப்பைன்ஸ் மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இது நடைமுறைக்கு வர உள்ளதாகவும் விரைவில் உலகம் முழுவதும் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.