Baba Vanga | Ryo Tatsuki File Pic (Photo Credit: @davenewworld_2 X | @UFOchronpodcast X)

ஜூலை 30, டோக்கியோ (World News): ரஷ்யாவில் உள்ள கம்சத்கா தீபகற்பத்தில் இன்று (ஜூலை 30) 8.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிபயங்கர நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹவாய், சிலி, ஜப்பான், சாலமன் தீவு பகுதிகளில் சுமார் 1 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரத்திற்கு அலைகள் எழும்பியுள்ளது. கடலோரப் பகுதிகளில் பேரழிவு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, ஜப்பானில் 2025ஆம் ஆண்டில் சுனாமி ஏற்படும் என்பது குறித்த பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்புகள் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. உண்மையில், இது பாபா வங்கா கணிப்பல்ல, மாறாக ஜப்பானிய மங்கா கலைஞர் ரியோ தட்சுகி (Ryo Tatsuki) என்பவருடைய கணிப்பு எனத் தெரியவந்துள்ளது. இவரை 'புதிய பாபா வங்கா' என்றும் குறிப்பிடுகின்றனர். கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. எச்சரிக்கை விடுத்ததா இயற்கை?.. காத்திருக்கும் பேரழிவு..!

புதிய பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ தட்சுகியின் கணிப்பு:

ரியோ தட்சுகி, கடந்த 1999ஆம் ஆண்டிலேயே தனது கனவுகளில் கண்ட சில சம்பவங்களை வைத்து, 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஜப்பானில் ஒரு பெரிய சுனாமி ஏற்படும் என்று கணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சுனாமி 2011இல் ஏற்பட்ட சுனாமியை விட 3 மடங்கு பெரியதாக இருக்கும் என்றும், ஜப்பானின் தெற்குப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்றும் அவர் கணித்திருந்தார். மேலும், அவர் வரைந்த சுனாமி பற்றிய ஓவியங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

சுனாமி எச்சரிக்கை:

இந்நிலையில், இன்று (ஜூலை 30) ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானின் ஹோக்கைடோ தீவுப் பகுதியிலும், ரஷ்யாவின் குரில் தீவுகளிலும் சுனாமி அலைகள் உருவாகியது. இதனால், ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் அவசரகால எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இது ரியோ தட்சுகியின் கணிப்பு உண்மையாகிவிட்டது என்ற நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், ரியோ தட்சுகி ஜூலை 05, 2025 அன்று ஜப்பானை ஒரு மெகா சுனாமி நேரடியாக தாக்கும் என்று கணித்திருந்தார். ஆனால், ஜப்பான் அரசு இதுவரை ரியோ தட்சுகியின் கணிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பசிபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாபா வங்காவின் கணிப்புகள் 2025:

பாபா வங்கா (Baba Vanga) பல்கேரிய தீர்க்கதரிசி ஆவார். இவர், தனது வாழ்க்கைக் காலத்தில் பல கணிப்புகளைக் குறிப்பிட்டுள்ளார். இவருடைய கணிப்புகள் பல உண்மையாக நிகழ்ந்துள்ளதால், இன்றும் அவரது கணிப்புகள் மக்கள் மத்தியில் அதிகளவில் பேசப்படுகின்றன. 2025ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் சில முக்கியமான கணிப்புகள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். Tsunami Warning: பேரழிவை தரும் அதிபயங்கர நிலநடுக்கம்.. ரஷ்யா, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை.. அதிர்ச்சியூட்டும் வீடியோ.!

ஐரோப்பாவில் போர்: ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க போர் அல்லது மோதல் வெடிக்கும் என்று அவர் கணித்ததாகக் கூறப்படுகிறது. இது ஐரோப்பிய கண்டத்தின் மக்கள் தொகையை கடுமையாகப் பாதிக்கும் என்றும், கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான மோதலாகவும் இருக்கலாம்.

உலகப் பொருளாதார சரிவு: உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும், வேலையின்மை மற்றும் நிதி பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.

ஆசியாவில் இயற்கை பேரழிவுகள்: ஆசியாவில் ஒரு சக்திவாய்ந்த இயற்கை பேரழிவு ஏற்படும் என்றும், இது நிலநடுக்கம் மற்றும் சுனாமியைத் தொடர்ந்து வரும் என்றும் அவர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இது ஜப்பானிய மங்கா கலைஞர் ரியோ தட்சுகியின், ஜப்பான் சுனாமி கணிப்புடன் தொடர்புடையதாக உள்ளது.

ஐரோப்பாவின் மக்கள்தொகை குறைவு: ஐரோப்பாவின் மக்கள்தொகை கணிசமாகக் குறையும் என்று அவர் கணித்துள்ளார். நவீன மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் குறைந்த பிறப்பு விகிதங்கள், இவருடைய கணிப்புக்கு ஒத்துப்போகின்றன.

வேற்று கிரகவாசிகள் தொடர்பு: மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வார்கள் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.

புதிய நோய்கள் மற்றும் மருத்துவ முன்னேற்றங்கள்: புதிய மர்மமான நோய்கள் தோன்றும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். அதேவேளையில், செயற்கை உறுப்புகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் போன்ற மருத்துவ கண்டுபிடிப்புகளும் உருவாகும் என்று கணித்துள்ளார்.