Russia Earthquake Tsunami Warning (Photo Credit : @NHKWORLD_News / @TheOfficialMrA1 X)

ஜூலை 30, ரஷ்யா (World News): ரஷ்யாவில் உள்ள கம்சத்கா தீபகற்ப பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.8 புள்ளிகளாக பதிவாகியுள்ள அதிபயங்கர நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹவாய், சிலி, ஜப்பான், சாலமன் தீவு பகுதிகளில் சுமார் 1 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரத்திற்கு அலைகள் எழும்பியுள்ளது. இதனால் ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலைகளில் உள்ள பணியாளர்களும் அவசரகதியில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவசர கதியில் வெளியேற்றப்படும் மக்கள் :

தொடர்ந்து கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவசர கதியில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் மக்கள் உடனடியாக கடலோரப் பகுதிகளில் இருந்து வெளியேறும் பொருட்டு எச்சரிக்கை ஒலியும் எழுப்பப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதிகள் கடல்நீரால் சூழப்பட்டுள்ள நிலையில், அதிபயங்கர நிலநடுக்கம் காரணமாக ராணுவத்தினர் மற்றும் மீட்பு படையினர் நிகழ்விடங்களில் களமிறக்கப்பட்டுள்ளனர். பல கடற்கரை நகரங்களில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களும் தவிக்கும் நிலைக்கு ஆகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. Aadi Perukku 2025: ஆடி 18 நன்னாளில் தாலி கயிறு மாற்ற நல்ல நேரம், மாற்றும் முறை இதோ.! 

பேரழிவை தரும் நிலநடுக்கம்?

சர்வதேச அளவில் கடந்த சில ஆண்டுகளாகவே 7 புள்ளிகளை கடந்த நிலநடுக்கம் மிக குறைவாக பதிவாகி வந்தது. இதனிடையே ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் 8.8 ரிக்டர் அளவுகோலில் பதிவு செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக பல நிலநடுக்கங்கள் மிதமான அளவில் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியிருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளை கடந்த நிலநடுக்கங்கள் அபாயகரமானதாக கருதப்படுகிறது. அதேவேளையில், 8 புள்ளிகள், 9 புள்ளிகள் தாண்டும் நிலநடுக்கங்கள் உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் தன்மையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் 8.8 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதால், கடலோரப் பகுதிகளில் பேரழிவு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

சுனாமி அலைகள் எழும் வீடியோ :