Whales / Russia Earthquake (Photo Credit : @Khhanzy X)

ஜூலை 30, ரஷ்யா (World News): ரஷ்யாவில் உள்ள கம்சட்கா தீபகற்ப பகுதியை மையமாகக்கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது ஏற்பட்டது. பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்காவில் இருந்து 119 கி.மீ தொலைவில் 20.7 கி.மீ ஆழத்தில் 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தால் ஜப்பான், சிலி, நியூசிலாந்து, பெரு, அமெரிக்காவின் கலிபோர்னியா, அலாஸ்கா, ஹவாய் தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடலோரப் பகுதியில் இருக்கும் மக்களை மீட்கும் பணியில் மீட்பு படை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவையும் விட்டு வைக்காத சுனாமி :

அமெரிக்காவை எந்த நேரத்திலும் சுனாமி அலைகள் தாக்கலாம் என்பதால், கடலோரப் பகுதியில் இருக்கும் மக்கள் அவசர கதியில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஜப்பானில் உள்ள 19 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். சுனாமி அலைகள் ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல 12 மணி நேரத்திற்கும் மேலாகும் என்பதாலும், அங்கு கடுமையான தாக்கம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாலும் கலிபோர்னியா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் உள்ள கடலோரப்பகுதி மக்களும் அவசர கதியில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். Tsunami Warning: பேரழிவை தரும் அதிபயங்கர நிலநடுக்கம்.. ரஷ்யா, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை.. அதிர்ச்சியூட்டும் வீடியோ.! 

சுனாமி அலைகளின் தாக்கம் குறித்த வீடியோ  :

70 ஆண்டுகளுக்கு பின் அதிபயங்கர நிலநடுக்கம் :

கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலக்கத்துக்கு பின்னர் ரஷ்யாவில் தற்போது 2025ல் தான் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பின்னர் பயங்கர நிலநடுக்கமானது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளதாக தெரியவரும் நிலையில், தற்போது வரை உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை.

நோயாளியை காப்பாற்றும் மருத்துவர்களின் வீடியோ :

கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் :

இதனை தொடர்ந்து நிலநடுக்கத்தின் போது பதிவு செய்யப்பட்ட கழுகு பார்வை காட்சிகளும், மருத்துவமனை ஒன்றில் செவிலியர்கள் நோயாளியின் அறுவை சிகிச்சையின் போது நோயாளியை காப்பாற்ற முயன்றது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. இதனிடையே கடந்த 5 நாட்களுக்கு முன் ரஷ்ய கடலோரப் பகுதிகளில் ஆழ்கடலில் வசித்து வரும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திமிங்கலங்கள் இயற்கை பேரழிவை முன்னதாகவே உணர்த்தி இருப்பதாகவும், தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளை திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய வீடியோ :

பாபா வாங்காவின் கணிப்பு :

மேலும் எதிர்கால கணிப்பாளர் என வர்ணிக்கப்படும் பல்கேரிய நாட்டின் ஜோதிடர் மறைந்த பாபா வாங்கா 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவிலான இயற்கை பேரழிவு நடக்கும். சுனாமி தாக்கும் என முன்னதாகவே தனது குறிப்புகளில் கணித்திருந்தார். இதனிடையே தற்போது ரஷ்யாவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு அதன் வாயிலாக பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாபா வாங்கா கணிப்பு பலித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவின் உண்மைத்தன்மை :

இந்த நிலையில் இதுகுறித்த வீடியோ கடந்த 2023 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 திமிங்கலங்கள் கடலோர பகுதியில் இருப்பதை கண்ட மக்கள் உதவி செய்து மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை நம்பி மக்கள் குழப்பமடையாமல் அமையுடன் எந்தவித அச்சமும் இன்றி இருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.