ஏப்ரல் 19, சென்னை (Chennai): இந்திய நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் (Lok Shaba Elections 2024) ஆனது நாடு முழுவதும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா தேர்தல்கள் 2024-ன் வாக்கு பதிவானது இன்று தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக இன்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. Seat Struggle in Indian Railway: டிக்கெட் எடுத்த பயணிகளுக்கு ரயிலின் கதவைத் திறக்காமல் வித்தவுட்டில் செல்லும் பயணிகள் அட்டூழியம்.. வைரலாகும் வீடியோ..!

தொடர்ந்து மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யா (Actor Suriya) அவரது குடும்பத்தோடு சென்று அவரது வாக்கினை பதிவு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூர்யா, “அனைவரும் வாக்களிப்பில் கலந்து கொள்ள வேண்டும். மக்கள் வந்து வாக்களிப்பதற்கு முன் தங்கள் வேட்பாளர்களை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.