மார்ச் 13, யஞ்சியோ (World News): சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது யஞ்சியோ நகரம். ஹூபேய் மாகாணத்திற்கு உட்பட்ட இந்நகரில், பிரதான சாலையில் வணிக வளாகங்கள் இருக்கின்றன. இந்நிலையில், இன்று காலை உள்ளூர் நேரப்படி 07:55 மணிக்கு மேல் திடீர் பயங்கர (Yanjiao Explosion) தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 1 கி.மீ சுற்றளவில் வீடுகள், வணிக வளாகங்களில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். திடீரென ஏற்பட்ட தீ மற்றும் வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். Space One Rocket Explodes: கிளம்பிய வேகத்தில் வெடித்துசிதறிய ஸ்பேஸ் ஒன் ராக்கெட்; வைரல் காட்சிகள் இதோ.!
ஒரு இடத்தில் உண்டான தீ பல இடங்களுக்கு பரவி அதிர்ச்சி: முதற்கட்ட விசாரணையில் கியாஸ் கசிவு காரணமாக வெடி விபத்து நிகழ்ந்துள்ளது உறுதியானது. இறைச்சி கடை ஒன்றில் ஏற்பட்ட தீ, அதனைத்தொடர்ந்து 1 கிமீ சுற்றளவில் உள்ள இடங்களிலும் ஏற்பட்டுள்ளது. முக்கிய கட்டிடங்கள், சாலைகள் என கியாஸ் தடம் பதிக்கப்பட்டு இருந்த இடங்களில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் வீடு வீடாகவும் அதிகாரிகள் யாரேனும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனரா? என சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. போர் ஏற்பட்டு ஊரே அழிந்தார் போல, பதறவைக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன.
JUST IN: Large explosion at restaurant in Yanjiao, China. Reports of casualties pic.twitter.com/ki7oRSHIIz
— BNO News (@BNONews) March 13, 2024
அதிர்ச்சியூட்டும் காணொளி:
🚨 BREAKING: HUGE EXPLOSION IS REPORTED IN YANJIAO, CHINA
The explosion happened in a building. There's no immediate report on casualties.pic.twitter.com/XylJsBuLUW
— Mario Nawfal (@MarioNawfal) March 13, 2024