மார்ச் 13, டோக்கியோ (Technology News): ஜப்பான் நாட்டில் உள்ள மேற்கு ஜப்பான், கிய் தீபகற்பத்தின் மலைப்பகுதியில் ஸ்பேஸ் ஒன் (Space One) நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் ஏவுதளம் இருக்கிறது. ஸ்பேஸ் ஒன் நிறுவனம் ஜப்பான் நாட்டின் முதல் தனியார் செயற்கைக்கோள் தயாரிப்பு நிறுவனம் ஆகும். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஸ்பேஸ் ஒன் நிறுவனம் செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் பிற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. Thoothukudi Shocker: சொத்துக்கு ஆசைப்பட்டு தம்பியின் மனைவியை கொலை செய்த அக்கா: பக்கா ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்து பதறவைக்கும் சம்பவம்.!
முயற்சி தோல்வியில் முடிந்தது: இந்நிலையில், இன்று காலை உள்ளூர் (ஜப்பான்) நேரப்படி 11:01 மணியளவில் ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் சார்பில் திரவ எரிபொருள் எஞ்சின் கொண்ட ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் சில நொடிகளுக்கு உள்ளகாவே திடீரென வெடித்து சிதறியது. இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில், ராக்கெட்டை வளிமண்டலத்தை தாண்டி விண்வெளியில் நிலைநிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. Minor Girl Gang Raped: திருவிழாவுக்கு வந்த 17 வயது சிறுமியை கடத்திச்சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம்; திருப்பூரில் பதறவைக்கும் சம்பவம்.!
தொழில்நுட்ப ரீதியாக விசாரணை: ஆனால், ஆராய்ச்சியாளர்களின் செயல்பாடுகள் கூடுதலாக தேவைப்படுவதை ராக்கெட் தோல்வி உறுதி செய்திருக்கிறது. இம்முயற்சி தோல்விக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நிகழ்விடத்தில் ராக்கெட் விழுந்த பகுதி மலைப்பாங்கான மற்றும் கடல் பகுதி என்பதால் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் இல்லை.
BREAKING: Space One rocket explodes during launch from southern Japan pic.twitter.com/8IWiu2bRKa
— BNO News (@BNONews) March 13, 2024