Child Rescued from Borewell (Photo Credit: @ANI X)

டிசம்பர் 13, சம்பல்பூர் (Odisha News): ஒடிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூர் மாவட்டம், ரெங்காலி, லரிபளி கிராமத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளைக்கிணற்றிலிருந்து நேற்று குழந்தையின் அழுகுரல் (Baby Stuck Borewell) சத்தம் கேட்டுள்ளது. இதனைகவனித்த உள்ளூர் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மாநில மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவ குழுவினரும் உடனடியாக நிகழ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு, குழந்தைக்கு ஆக்சிஜன் தொடர்ந்து கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

20 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு: மீட்பு பணியாளர்களும் தகவல் கிடைத்ததும் விரைந்து வந்தனர். மாலை 04:30 மணிமுதல் மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில், ஆழ்துளை கிணற்றின் 20 அடி பள்ளத்தில் குழந்தை சிக்கியது தெரியவந்தது. இதனையடுத்து, ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டு பகுதியிலேயே பள்ளம் தோண்டப்பட்டு, சுமார் 5 மணிநேர மீட்பு நடவடிக்கைகளுக்கு பின்னர் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. Rinku Singh Six Broke Glass: ரிங்கு சிங் அடித்தே சிக்ஸரால் கண்ணாடி சேதம்: கௌசிக் போல குறுக்கே புகுந்த மழையால், வெற்றிவாகை சூடிய தென்னாபிரிக்கா.! 

சமீபத்தில் பிறந்த பச்சிளம் குழந்தை: பிறந்த பச்சிளம் குழந்தையை மர்ம நபர்கள் ஆழ்துளை கிணற்றில் வீசிச்சென்ற காரணத்தால், அதனை யாரும் உரிமை கோரவில்லை. இதனால் குழந்தையை ஆழ்துளை கிணற்றில் வீசிச்சென்றது யார்? என்ற விசாரணை நடந்து வருகிறது. குழந்தை மீட்கப்பட்டதும் நிகழ்விடத்திலேயே மருத்துவ குழுவினர் உதவியுடன் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு, சம்பல்பூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டது.

உரிமை கோரப்படாத பெண் குழந்தை: தற்போது வரை பெண் குழந்தையை யாரும் உரிமை கூறாத நிலையில், குழந்தையை யார் கைவிட்டு சென்றார்? என்ற விசாரணையானது நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மீட்பு படையினர், இரவு 09:30 மணியளவில் குழந்தையை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இதனை அம்மாநில முதல்வரும் பாராட்டி இருக்கிறார்.