Rinku Singh Six | Media Box Glass Broken (Photo Credit: @StarSportsIndia / @RajaArora X)

டிசம்பர் 13, டர்பன் (Sports News): தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்க அணியுடன் (IND Vs SA T20i Series 2023) மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், முதல் ஆட்டம் மழையினால் தடைபட்டுபோனது. இந்த நிலையில், நேற்று இரண்டாவது ஆட்டமானது ஜியார்ஜ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

180 ரன்கள் குவித்த இந்திய அணி (Team India): இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 19.3 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் சார்பில் விளையாடிய திலக் வர்மா 20 பந்துகளில் 29 ரன்னும், சூரிய குமார் யாதவ் 36 பந்துகளில் 56 ரன்னும், ரிங்கு சிங்க் 39 பந்துகளில் 68 ரன்னும், ஜடேஜா 14 பந்துகளில் 19 ரன்னும் அடித்திருந்தனர். Youth Kidnapped by Politician: அப்பா வாங்கிய கடனுக்கு மகன் கடத்தல்: அரசியல் கட்சிப்பிரமுகர் அதிர்ச்சி செயல்.. திருச்சியில் பகீர் சம்பவம்.! 

குறுக்கிட்ட மழையினால் டிஎல்எஸ் (DLS Method) முறை: மழை ஆட்டத்தின் இறுதியில் குறுக்கிட்டதன் காரணமாக, சிறிது ஆட்டம் தடைபட்டாலும் பின் டி.எல்.எஸ் முறையில் தென்னாபிரிக்க அணி 15 ஓவர்களில் 154 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை தென்னாபிரிக்க அணி 13.5 ஓவரிலேயே எட்டி வெற்றியை தனதாக்கியது.

13 ஓவரில் வெற்றி: தென்னாபிரிக்காவின் சார்பில் விளையாடிய ரீசா ஹென்றிக் 27 பந்துகளில் 49 ரன்னும், ஏய்டன் மார்க்கம் 17 பந்துகளில் 30 ரன்னும், டேவிட் மில்லர் 12 பந்துகளில் 17 ரன்னும், திரிஸ்டன் ஸ்டூப்ஸ் 12 பந்துகளில் 14 ரன்னும், ஆன்டில் பெக்லுக்வாயோ 4 பந்துகளில் 10 ரன்களும் எடுத்து 154 ரன்கள் என்ற இலக்கை எட்டி அணியை வெற்றி பெறச் செய்தனர். Pilgrims Return Without Entering Sabarimala: சபரிமலையில் தரிசனம் செய்யாமலேயே திரும்பும் பக்தர்கள்… நெரிசலான சபரிமலை..! 

தென் ஆப்பிரிக்க அணி முன்னிலை: இதனால் டி20 தொடரில் 1 - 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி முன்னிலை வகிக்கிறது. அடுத்த ஆட்டமானது நாளை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அன்று ஒருநாள் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த போட்டியின் போது, ரிங்கு சிங் (Rinku Singh) அடித்த சிக்ஸர், ஊடகத்தினர் பணியில் இருக்கும் அறையின் கண்ணாடிகளை பதம்பார்த்தது. இது தொடர்பான புகைப்படமும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ஊடகத்தினரின் அறை கண்ணாடியை பதம்பார்த்த சம்பவம்: 

அடித்து நொறுக்கிய ரிங்கு சிங்: