Presidential Candidate Rally Stage Collapse: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்து 5 பேர் பலி., 50 பேர் படுகாயம்... நூலிழையில் உயிர்தப்பிய வேட்பாளர்..!
காற்றின் வேகத்தால் இழுக்கப்பட்ட கூரைகள் காரணமாக மேடை சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில், அரசியல் பேரணியில் ஆசையாக கலந்துகொண்ட மக்களில் 5 பேர் பலியாகினர். 50 பேர் படுகாயம் அடைந்தனர்.
மே 23, மெக்சிகோ (World News): மெக்சிகோ நாட்டில் உள்ள வடகிழக்கு பகுதியில், நேற்று மாலை மெக்சிகோ தேர்தலில் அதிபருக்கான வேட்பாளராக போட்டியிடும் ஜோர்ஜ் மேக்னெஸ் (Jorge Maynez) கலந்துக்கொண்ட பிரம்மாண்டமான அரசியல் பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் ஜோர்ஜின் ஆதரவாளர்கள் பலரும் திரளாக வருகை தந்திருந்தனர். Buddha Jayanthi Sand Art: புத்தரின் பிறந்தநாளை தனது பாணியில் வரவேற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.!
காற்றினால் இழுக்கப்பட்ட (Political Rally Stage Collapse) கூரைகள்: இவர்கள் பேசுவதற்கு என பிரம்மாண்டமான மேடையும் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அச்சமயம் திடீரென வீசிய காற்றின் அழுத்தம் தாங்காத மேடையின் கூரைகள் காரில் இழுக்கப்பட்டதால், மேடை அங்கு கூடியிருந்த மக்களின் மீது சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிபர் வேட்பாளர் ஜோர்ஜ் மேக்னெஸ் நூலிழையில் உயிர்தப்பினார். Political Rally Stage Collapse: அரசியல் நிகழ்ச்சியில் சரிந்து விழுந்த மேடை; 4 பேர் பலி., பலர் படுகாயம்.!
5 பேர் பலி., 50 பேர் படுகாயம்: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் சிக்கிய பொதுமக்கள் பலரும் உயிருக்கு போராடி அலறித்துடித்தனர். உடனடியாக அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர், காயமடைந்த பலரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது வரை மொத்தமாக 5 பேரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 50 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்ய்யப்ட்டுள்ளனர்.
மேடையில் இருந்த நபர்கள் தப்பியோடி உயிர்பிழைத்த காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகின்றன.
BREAKING: At least 4 dead and several injured after stage collapsed at a political rally in Mexico. Mexican presidential candidate escaped the collapse pic.twitter.com/JGH2f7G1H2
— Insider Paper (@TheInsiderPaper) May 23, 2024
விபத்தின் போது பதிவான காட்சிகள்:
UPDATE: Death toll from stage collapse in Mexico rises to 5, at least 50 injured https://t.co/3KOYqFW0Hb
— BNO News (@BNONews) May 23, 2024
(The above story first appeared on LatestLY on May 23, 2024 09:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

