Mexico Stage Collapse (Photo Credit: @BNONews X)

மே 23, மெக்சிகோ (World News): மெக்சிகோ நாட்டில் உள்ள வடகிழக்கு பகுதியில், நேற்று மாலை பிரம்மாண்டமான அரசியல் பேரணி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் திரளாக வருகை தந்திருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேச பிரம்மாண்டமான மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், திடீரென வீசிய காற்றின் அழுத்தம் தாங்காத மேடையின் கூரைகள் காரில் இழுக்கப்பட்டதால், மேடை அங்கு கூடியிருந்த மக்களின் மீது சரிந்து விழுந்தது. Kalki 2898 AD Bujji Video Out Now: பிரபாஸின் கல்கி ஏடி 2898 படத்தில் இடம்பெற்ற புஜ்ஜி கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ; மிரளவைக்கும் காட்சிகள்.! 

4 பேர் பலி., பலர் படுகாயம்: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் சிக்கிய பொதுமக்கள் பலரும் உயிருக்கு போராடி அலறித்துடித்தனர். உடனடியாக அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர், காயமடைந்த பலரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 4 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டது. அவர்களின் உடலை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.

மக்கள் வெள்ளம் திரண்டு இருந்தபோது, திடீரென மேடை சரிந்து விழுந்த பதைபதைப்பு காட்சிகளும் வெளியாகியுள்ளன.