மே 27, ஐதராபாத் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம், பாப்புலபாடு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை, அதிவேகமாக வந்த கார் ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதி (Car Collided With Lorry) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரின் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், ஒருவர் மட்டும் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். Young Girl Stabbed To Death: இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை; காவல்நிலையத்தில் சரணடைந்த வாலிபர்..! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், இந்த கோர விபத்தில் உயிரிழந்த 4 பேரும் தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டம், நல்லம்மநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதில், சத்யா என்ற பெண் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு, விஜயவாடா மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், ஆந்திராவில் உள்ள கொவ்வூரில் இருந்து தமிழகத்திற்கு காரில் சென்ற போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், உயிரிழந்த 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இந்த விபத்தில் சுவாமிநாதன் (வயது 40), ராகேஷ் (வயது 12),ராதா பிரியா (வயது 14) மற்றும் கோபி (வயது 23) ஆகியோர் உயிரிழந்தனர். இதில், சுவாமிநாதன் என்பவரின் மனைவி சத்யா (வயது 28) என்பவர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.