Ragi Upma (Photo Credit: YouTube)

மே 27, சென்னை (Kitchen Tips): நம் உணவில் வாரம் ஒருமுறை சத்தான ராகியை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை பல வகைகளில் சமைத்து உட்கொள்ளலாம். அந்த வகையில் ராகி தோசை, ராகி புட்டு, ராகி உப்புமா போன்றவை செய்யலாம். இதில் ராகி உப்புமா (Ragi Upma) எப்படி செய்வது என்பதனை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 1 கப்

தேங்காய் துருவல் - கால் கப்

பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 4

வெங்காயம் - 1

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு. Woman Doctor Death: மின்சாரம் தாக்கி பெண் மருத்துவர் பலி; லேப்டாப் சார்ஜர் உயிரை பறித்த சோகம்..!

தாளிக்க:

கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி

கடுகு, உளுந்து பருப்பு - கால் தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பவுலில் ராகி மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து நன்கு கலந்து வைக்க வேண்டும். பின், ஒரு துணியில் போட்டு ஆவியில் வேக வைக்கவும்.

அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி எல்லாம் நறுக்கி வைக்க வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

பின்னர், ஊறவைத்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.

பின், ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, ஆவியில் வேகவைத்த ராகி மாவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

நன்கு கலந்த மாவில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி 5 நிமிடங்கள் வதக்கவும். பின்னர், தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை தூவி இறக்கலாம்.

இறுதியாக, பரிமாறும் பவுலில் கொட்டி அதன் மேல், தேங்காய் துருவல் தூவி பரிமாறவும். மிகவும் சத்தான மற்றும் சுவையான ராகி உப்புமா தயார்.