Japan Plane Crash: ஜப்பானில் நேருக்கு நேர் மோதிய 2 விமானங்கள்... அலறிய பயணிகள்..!
ஜப்பானின் ஒசாகா விமான நிலையத்தில் 2 பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின.
பிப்ரவரி 02, ஜப்பான் (World News): ஜப்பானின் ஒசாகாவில் இடாமி சர்வதேச விமான நிலையம் (New Chitose Airport) அமைந்துள்ளது. இங்கு உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் அங்கு மட்சுயமா நகருக்கு செல்ல விமானம் ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது புகுவோகாவில் இருந்து கிளம்பிய ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் தரை இறங்கியது. ஆனால், விமான கட்டுப்பாட்டு அறையின் தவறான சமிக்ஞைகளால், அந்த விமானம் தரையிறங்கும்போது ஏற்கனவே புறப்பட தயாராக இருந்த விமானத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. Kenya Gas Explosion: கியாஸ் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து; 165 பேர் படுகாயம்.!
இந்த விபத்தில் இரு விமானங்களிலும் முன்பக்க இறக்கைகள் சேதம் அடைந்தன. எனினும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் விபத்திற்குள்ளான விமானங்களில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.