நவம்பர் 13, லீமா (World News): தென் அமெரிக்காவில் உள்ள நாட்டில் பயங்கர சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. இந்த விபத்து அங்கு கடந்த சில ஆண்டுகளில் நடந்த மிகவும் மோசமான விபத்தாகவும் கருதப்படுகிறது. தெற்கு பெருவில் பிக்கப் ட்ரக் மீது இரண்டடுக்கு பேருந்து மோதி பள்ளத்தாக்குக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 37 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். அங்குள்ள சாலா என்ற பகுதியிலிருந்து அரைக்விவா பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, இந்த விபத்தில் சிக்கி இருக்கிறது.
200 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்து:
பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது, 200 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பலி எண்ணிக்கையும் கவலைக்குரிய வகையில் உயர்ந்து இருக்கிறது. பெரு - சிலியை இணைக்கும் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் 37 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் குறித்த தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பேருந்தில் குழந்தைகள், முதியவர்கள் என 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 24 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். Pakistan Blast: இஸ்லாமாபாத்தில் குண்டு வெடிப்பு.. 12 பேர் உடல் சிதறி மரணம்.. இந்தியா மீது பழி.!
லாரி ஓட்டுநர் கைது:
வளைவு பகுதியில் லாரி மீது பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கிய நிலையில், அதே வேகத்தில் 650 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்தப் பகுதி பாறை நிலப்பரப்பு கொண்டது என்பதால், பேருந்து கவிழ்ந்த பின் உயிர் பலியும் அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இது போன்ற ஒரு துயர சம்பவத்தில் 44 பேர் அங்கு பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேருந்து விபத்து தொடர்பான வீடியோ:
At least 37 people were killed and dozens injured after a bus plunged into a ravine in southern Peru’s Arequipa region, local authorities said https://t.co/ATK9YfbFFm pic.twitter.com/6K8yzf4lBQ
— Reuters (@Reuters) November 12, 2025