Ukraine-Russia War: தீவிரமான ரஷ்யா உக்ரைன் போர்.. ரஷ்யாவின் சில பகுதிகளில் அவசரநிலை பிரகடனம்..!
ரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 16, மாஸ்கோ (World News): கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரண்டு வருடங்கள் ஆகியும் போரின் (Ukraine-Russia War) தீவிரம் குறையவில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் எல்லைக்குள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உக்ரைன் படைகள் நுழைந்ததாக தகவல் வெளியானது. சமீபத்தில் ரஷ்யாவின் குர்ஸ் பிராந்தியத்தில் (Kursk region) அமைந்துள்ள சட்ஜா நகரை (Sudzha town) தனது படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். Pakistan Shocker: உலகமே அதிர்ச்சி.. பாக். சுதந்திர தினத்தில்... பெண் பலாத்காரம்., கை-கால்களை கட்டி ரோட்டில் வீசிய பயங்கரம்.!
இதன் காரணமாக அந்த பிராந்தியத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5,000 சிறுவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் படையின் முன்னேற்றத்தை ரஷ்ய படையினரால் தடுக்க முடியாமல் போனது. மேலும் கூர்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.