Pakistan Belgian Woman Rape (Photo Credit; @TimesAlgebraIND X)

ஆகஸ்ட் 16, இஸ்லாமாபாத் (World News): பாகிஸ்தான் நாட்டின் சுதந்திரதினம், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 14 அன்று சிறப்பிக்கப்பட்டது. அன்றைய நாளில் மிகப்பெரிய துயரம் பாகிஸ்தானில் நடந்துள்ளது அம்பலமாகி இருக்கிறது. அதாவது, 28 வயதுடைய வெளிநாட்டு பெண்மணி பலாத்காரம் செய்யப்பட்டு, சாலையில் கை-கால்களை கட்டிப்போட்ட நிலையில் மீட்கப்பட்டு இருக்கிறார். அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத் (Islamabad), ஆபிப்பாரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம்பெண் ஒருவர் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் தன்னை பெல்ஜியன் (Belgium) குடிமகள் என தெரிவித்துள்ளார். Morne Morkel Appointed As India's Bowling Coach: பாகிஸ்தான் முன்னாள் கோச் மோர்னே மோர்கல்.. இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம்..!

காவல்துறையினர் தீவிர விசாரணை:

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் பாகிஸ்தானுக்கு வருகை தந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 09ம் தேதி தமீஸுதீன் என்பவரால் கடத்தப்பட்டு, தொடர்ந்து 5 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளர். பின் ஆகஸ்ட் 14 அன்று கை-கால்கள் கட்டப்பட்டு வீதியில் வீசி செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பெண் கொடுத்த தகவலின்பேரில், வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் குற்றவாளியை கைது செய்தனர். அவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காவல்துறையினரின் விசாரணையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு தமீஸுதீன் மறுப்பு தெரிவித்ததால், அவரின் மருத்துவ பரிசோதனைக்கு அதிகாரிகள் காத்திருக்கின்றனர். மேலும், பெண்ணை அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறுகிறார். இதனால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டு இருப்பதாக உள்ளூர் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.