செப்டம்பர் 11, மாஸ்கோ (World News): ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த ஜூலை மாதம் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி அலைகள் உண்டாகின. இந்த சுனாமி அலைகள் அங்குள்ள ஒருசில கிராமங்களை தாக்கிய நிலையில், ரஷ்யா மற்றும் ஜப்பான், அமெரிக்கா என 8 நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தை சுனாமி அலைகள் தாக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமடைந்தன. இதனால் பெரிய அளவிலான இழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், கம்சட்கா பகுதியை மையமாக இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. Amazon Now: 10 நிமிடத்தில் டெலிவரி.. 3 நகரங்களில் சேவையை விரிவுபடுத்தும் அமேசான்..!
ரஷ்யாவில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை (Russia Earthquake Today Tsunami Warning):
கம்சட்கா பகுதியை மையமாக கொண்டு இன்று 111 கிமீ தொலைவில், 39 கிமீ அலாதில் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இந்த அபாய அளவைத்தொடர்ந்து, கடலோர பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டி சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின்போது ஒருசில கட்டிடங்கள் குலுங்கிய வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சுனாமி காரணமாக ஜப்பானிலும் கடல் அலைகள் சில அடி வரை எழும்பி பின் குறையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிலநடுக்கம்:
பூமியின் நிலநடுத்தட்டுகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும்போது ஏற்படும் நிகழ்வு நிலநடுக்கம் என அழைக்கப்படுகிறது. இரண்டு நில அமைப்புகள் மோதும்போது, கடலுக்கடியில் ஏற்படும் உயர்வு - தாழ்வு சுனாமி எனப்படும் மிகப்பெரிய அலைகளை உண்டாக்குகிறது. இதனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட அழிவுகள் ஏராளம். சமீபத்தில் கூட ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக சுமார் 1500 க்கும் அதிகமான மக்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தின்போது பதிவு செய்யப்பட்ட காணொளி:
Video from 7.5 earthquake in Kamchatka, Russia. pic.twitter.com/9M6nUkTVyO
— Brian’s Breaking News and Intel (@intelFromBrian) September 13, 2025