செப்டம்பர் 30, கவுகாத்தி (Assam News): அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹட் மாவட்டம் (Jorhat, Assam), மரியாணி (Mariani Forest Range) வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், அங்குள்ள கிராமங்களை நோக்கி உணவுதேடி காட்டு யானை கூட்டம் கடந்த சில நாட்களாக வந்துள்ளது.
இதனை வனத்திற்குள் மீண்டும் விரட்டும் பணியில் சரக வனத்துறையினர் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று பிஜோய் நகர் பகுதியில் காட்டுயானை நுழைந்துவிட்டதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்த காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக கூட்டத்தில் இருந்த தலைமை யானை, ஒற்றை ஆளாக வனத்துறையினரை விரட்டி இருக்கிறது. Ulunthurpet Shocker: நள்ளிரவில் கரும்புகை.. வீட்டிற்குள் உடல் கருகி பிணமாக இருந்த தந்தை-மகள்-பேத்திகள்.. உளுந்தூர்பேட்டையில் சோகம்.!
அவர்களின் முயற்சிகள் அனைத்தும் பொய்த்துப்போக, வனத்துறை அதிகாரியான அதுல் கலிதா (Atul Kalita) என்பவர் யானையின் பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பணியில் இருந்த பிற 3 அதிகாரிகளும் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையில் நல்ல அனுபவம் பெற்ற அதிகாரியாக இருந்து வந்த அதுல், யானையின் பிடியில் சிக்கி உயிரிழந்தது சக அதிகாரிகளிடையே வருத்தத்தை தந்துள்ளது.