Dutch Girl tie Knot with Indian: இந்து முறைப்படி, காதலரை கரம்பிடித்த நெதர்லாந்து பெண்மணி.. திருமணம் முடிந்த கையுடன் கொண்டாட்டம்.!
ஜாதி, மதம், இனம், மொழி என பல்வேறு வேறுபாடுகள் கொண்டு ஒவ்வொரு மனிதரும் வாழ்ந்து வந்தாலும், அவர்களை அரவணைத்து ஒன்றிணைப்பது அன்பு என்ற காதல் பாலம் மட்டுமே. அந்த காதல் கைகூடினால் வாழ்க்கையிலும் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக டச்சு பெண்ணை இந்தியர் கரம்பிடித்து இருக்கிறார்.
டிசம்பர் 02, லக்னோ (Lucknow): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாதேஹ்பூர் பகுதியை சேர்ந்தவர் ஹர்திக் வர்மா (வயது 32). இவர் வேலைக்காக நெதர்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் ஹரிதிக் வர்மா மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். அதே நிறுவனத்தில், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த கேப்ரியல்லா துடா என்ற பெண்மணியும் சக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
நட்பு காதலானது: ஹர்திக் வர்மா - கேப்ரியல்லா இடையே ஏற்பட்ட நட்பு ரீதியான பழக்கமானது, பின்னாளில் காதலாக (Netherland Girl) மாறியதாக தெரியவருகிறது. இதனையடுத்து, இருவரும் ஒருவரையொருவர் பேசிப்பழகி தெரிந்துகொண்டு, உயிருக்கு உயிராக காதலித்து இருக்கின்றனர். Bangladesh Earthquake: வங்கதேசத்தில் இன்று காலையிலேயே மிதமான நிலநடுக்கம்: பீதியில் வீதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்.!
3 ஆண்டுகள் லிவிங் டுகெதர்: தங்களின் காதல் வாழ்க்கையை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்த திட்டமிட்ட காதல் ஜோடி, தங்களின் குடும்பத்தினரிடம் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்த பின்னர் தான், அவர்களின் குடும்பத்தினருக்கே தாங்கள் காதல் வயப்பட்டது குறித்து கூறி இருக்கின்றனர்.
இருதரப்பு சம்மதம்: அவர்களும் காதல் ஜோடியின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, அவரவர் வழக்கப்படி திருமணம் நடக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மணமகள் வீட்டார் இந்தியாவுக்கு வந்தனர். நவம்பர் 29ம் தேதி தம்பதிகளுக்கு இந்து முறைப்படி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று முடிந்தது.
இந்து முறைப்படி திருமணம்: பெண் வீட்டார் சார்பாக மணமகளின் பெற்றோர் பார்பரா துடா - மார்ச்சின் துடா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர். இந்த காதல் ஜோடி டிசம்பர் 25ம் தேதிக்குள் நெதர்லாந்து சென்று, அங்கு தேவாலயத்தில் கிருத்துவ முறைப்படி திருமணம் செய்து வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் தயாராகியுள்ளது.
வர்மா - கேப்ரியல்லா தம்பதி:
திருமண வீடியோ: