2024 Kawasaki Ninja ZX-6R: "நான் முறுக்க முறுக்க என்ன பறக்க பறக்க விடுவாயோ.." இந்தியாவில் 2025 கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் அறிமுகம்..!
கவாஸாகி நிறுவனம் தன்னுடைய 2025 நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் பைக் மாடலை உலகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
ஜூன் 10, புதுடெல்லி (New Delhi): கவாஸாகி (Kawasaki) நிறுவனத்தின் அதிக கவர்ச்சியான தோற்றம் கொண்ட பைக் மாடல்களில் ஒன்றாக நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் (Ninja ZX-6R) இருக்கின்றது. இந்த பைக்கில் புதிய நிற தேர்வை அறிமுகம் செய்திருக்கின்றது, கவாஸாகி நிறுவனம். இதில் பியர்ல் ரோபோட்டிக் ஒயிட்/ மெட்டாலிக் கிராஃபைட் கிரே (Pearl Robotic White / Metallic Graphite Gray) மற்றும் மெட்டாலிக் மேட் டார்க் கிரே / இபோனி (Metallic Matte Dark Gray/ Ebony) ஆகிய புதிய நிற தேர்வுகளே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. YSRC Leader Found Dead: தேர்தல் பந்தயம்.. ஒய்.எஸ்.ஆர்.சி தலைவர் ஜக்கவரபு வேணுகோபால் கொலை.. ஆந்திராவில் பரபரப்பு..!
எஞ்சினை பொருத்த வரை நிஞ்ஜா இசட்எக்ஸ்-6ஆர்-இல் 636 சிசி, இன்லைன்-4 சிலிண்டர் மோட்டாரே பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 13,000 ஆர்பிஎம்மில் 129 எச்பி பவரையும், 11,000 ஆர்பிஎம்மில் 69 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த பைக்கில் அலுமினியம் பெரிமீட்டர் பிரேம், ஷோவா சஸ்பென்ஷன் மற்றும் 17 அங்குல சக்கரங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)