அக்டோபர் 24, சென்னை (Technology News): ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6 Smartphone) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது, அந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இப்போது, முழு தகவல்களும் சீனாவில் கசிந்துள்ளன. ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் 7800mAh பேட்டரி திறனுடன், வரும் அக்டோபர் 27ஆம் தேதி சீன சந்தையில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, விரைவில் இந்திய சந்தையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போனின் கலர், பேட்டரி, சார்ஜிங், டிஸ்பிளே, ஐபி ரேட்டிங் போன்ற அம்சங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியானவை. மற்றவைகள் அனைத்தும் சந்தையில் கசிந்தவை ஆகும். Amazon: 5,00,000 பேரின் வேலைக்கு ஆப்பு.. அமேசான் நிறுவனம் முடிவு.. ஷாக்கில் ஊழியர்கள்..!
ஒன்பிளஸ் ஏஸ் 6 சிறப்பம்சங்கள் (OnePlus Ace 6 Specifications):
- ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில், ஆண்ட்ராய்டு 16OS கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3nm சிப்செட் மற்றும் அட்ரினோ 830GPU கிராபிக்ஸ் கார்டு உள்ளது. லேட்டஸ்ட் கலர்ஓஎஸ் 16 கிடைக்க இருக்கிறது. இதில், 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 1.5K, 165Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது.
- கேமரா பொறுத்தவரை, 50MP மெயின் கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா, 16MP செல்பி கேமரா கிடைக்க இருக்கிறது. இதனுடன் ஓஐஎஸ் டெக்னாலஜி வசதி உள்ளது.
- 12ஜிபி ரேம் + 256ஜிபி ரோம், 16ஜிபி ரேம் + 256ஜிபி ரோம், 12ஜிபி ரேம் + 512ஜிபி ரோம் என 3 வேரியண்ட்கள் வெளியாகவுள்ளன. மேலும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ரோம் மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி ரோம் கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்களும் உள்ளன.
- பேட்டரியை பொறுத்தவரையில், 7800mAh பேட்டரி திறனுடன், 120W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மேலும், அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார் கிடைக்கிறது.
- இதுதவிர, யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. கூடுதலாக, IP69K ரேட்டிங் கிடைக்கிறது. வை-பை 7, ப்ளூடூத் 5.4 ஆப்சன்களும் வருகிறது.
- ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன், குயிக் சில்வர், ஃபிளாஷ் ஒயிட், ரேசிங் பிளாக் ஆகிய மூன்று விருப்ப வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.