செப்டம்பர் 27, சென்னை (Technology News): இந்தியாவில் மிகப்பெரிய விற்பனை சந்தையை கொண்டுள்ள சோனி நிறுவனம் தனது பண்டிகை கால சலுகையாக சோனி பிரியர்களுக்கு உற்சாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய சந்தையில் ப்ளே ஸ்டேஷன் 5 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு தள்ளுபடி விளையும் வழங்கப்படுகிறது. குறுகிய கால சலுகையாக சோனி டிஜிட்டல் மற்றும் பிசிக்கல் எடிசன் (Physical Edition) மாடல்களின் விலை தற்போது ரூ.5000 வரை குறைக்கப்பட்டுள்ளன.
பண்டிகை சலுகையை அறிவித்த சோனி நிறுவனம் :
இந்த சலுகையை சோனி திங்கட்கிழமை முதல் அமேசான், பிளிப்கார்ட் உட்பட இணைய வர்த்தகத்தில் செயல்படுத்தி விற்பனை தொடங்கியது. மேலும் ஆஃப்லைன் விற்பனைகளிலும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ப்ளே ஸ்டேஷன் சாதனத்தின் தாய் நிறுவனம் தனது சலுகையை அறிவித்த நிலையில், அந்த சலுகை தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் மாடலுக்கும் ரூ.5000 தள்ளுபடி செய்யப்படுகிறது. ChatGPT Pulse: சாட்ஜிபிடி பயனர்களே ரெடியா?.. வேலையை எளிதில் முடிக்க வந்தாச்சு சாட்ஜிபிடி பல்ஸ்.. புதிய அப்டேட்.!
ப்ளே ஸ்டேஷனுக்கு ஆஃபர் :
இந்த சலுகையின் கீழ் PS5 டிஜிட்டல் எடிசன் ரூ.44,990க்கும், சில்லறை விலையில் ரூ.49,990க்கும் கிடைக்கிறது. இதுவரை ரூ.54,990க்கு விற்பனை செய்யப்பட்ட பிசிக்கல் எடிசன் ரூ.49,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகை அக்டோபர் 19ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். அமேசான், பிலிப்கார்ட், பிலிங்கிட், ஜெப்டோ, ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ், சோனி சென்டர் உட்பட பிற அங்கீகரிக்கப்பட்ட விற்பனை கடைகளிலும் இந்த விலையில் ப்ளே ஸ்டேஷன் 5 பெற்றுக் கொள்ளலாம்.