Fire Accident in Andhra Pradesh (Photo Credit: @ndtv X)

அக்டோபர் 08, ராயவரம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் பானா சஞ்சா பட்டாசு உற்பத்தி நிலையத்தில், இன்று (அக்டோபர் 08) ஏற்பட்ட தீ விபத்தில் (Fire Accident) 6 பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயமடைந்தனர். இதுகுறித்த விசாரணையில், பட்டாசு உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். Bigg Boss Shutdown: கழிவுநீர் கூட போக வழியில்லையா?.. விதிகளை மீறிய பிக் பாஸ் ஸ்டுடியோவை இழுத்து மூட உத்தரவு.!

போலீஸ் விசாரணை:

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகுல் மீனா இதுகுறித்து கூறுகையில், பட்டாசு உற்பத்தி பிரிவு உரிமம் பெற்ற ஒன்றாகும். இந்த தீ விபத்தில் உயிரிழந்த 6 பேரின் அடையாளம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம். மேலும், படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: