MG Windsor EV: புதிதாக களம் இறங்கிய விண்ட்ஸர் இவி கார்.. இன்று முதல் புக்கிங் தொடக்கம்..!

விண்ட்ஸர் இவி எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங்கை ஏற்கும் பணிகளை எம்ஜி மோட்டார் நிறுவனம் நாடு முழுவதும் தொடங்கி உள்ளது.

Windsor EV (Photo Credit: @MGMotorIn X)

அக்டோபர் 03, சென்னை (Chennai): விண்ட்ஸர் இவி (Windsor EV) எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங்கை ஏற்கும் பணிகளை எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் நாடு முழுவதும் தொடங்கி உள்ளது. ஆன்லைன் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஷோரூம்கள் வாயிலாக இந்த காரை புக் செய்துக் கொள்ள முடியும். அதுவும், ரூ. 11 ஆயிரம் முன்தொகையிலேயே புக்கிங்குகள் ஏற்கப்படுகின்றது. இது இந்தியாவின் முதல் சியூவி ரக கார் மாடலாகும். Google Doodle: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை; மகளிர் கிரிக்கெட்டை உற்சாகப்படுத்த கூகுளின் சிறப்பு டூடுல் இதோ.!

சிறப்பம்சங்கள்: இந்த காரில் 15.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதிகளுடன் வழங்கப்பட இருக்கின்றது. இதை சமீபத்திய டீசர் படம் வாயிலாகவே எம்ஜி நிறுவனம் உறுதிப்படுத்தியது. மேலும் 8.8 அங்குல டிஜிட்டல் டிரைவர்களுக்கான இருக்கை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பவர்டு சீட், பன்முக வண்ணங்களில் ஒளிரும் வசதிக் கொண்ட ஆம்பியன்ட் லைட், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பவர் டெயில்கேட் ஆகிய அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. அதுமட்டுமின்றி இந்த சியூவி ரக எலெக்ட்ரிக் காருக்கு ரூ. 13.49 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement