Odisha 95 Year Old Woman (Photo Credit : @XpressOdisha X)

ஜூலை 13, ஒடிசா (Odisha News): ஒடிசா மாநிலத்தில் உள்ள நுவபாடா மாவட்டத்தில் வசித்து வருபவர் மங்கல் பாரி மொஹாரா (வயது 95). வயது மூப்பு காரணமாக நடப்பதற்கு மிகப்பெரிய சிரமத்தை அனுபவிக்கும் மூதாட்டி சமீபத்தில் நாய் கடியால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உள்ளூர் மருத்துவர் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார். மேலும் அவரிடம் ரேபிஸ் தடுப்பூசி இல்லாததால் அருகில் உள்ள கிராம சுகாதார மையத்திற்கு செல்லவும் அறிவுறுத்தி இருக்கிறார்.

ரேபிஸ் தடுப்பூசி செலுத்த கால்நடையாக சென்ற மூதாட்டி :

இதனால் 10 கிலோமீட்டர் அதிகமான தூரம் கொண்ட கிராமம் ஒன்றுக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பொறுமையாக அவர் கால்நடையாக புறப்பட்டு இருக்கிறார். பெரும் சிரமத்துக்கு மத்தியில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற மூதாட்டி தடுப்பூசி செலுத்தி திரும்பியுள்ளார். மூதாட்டி தடுப்பூசி செலுத்துவதற்கு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், மக்களுக்கு சேவை செய்வதாக அரசியல் கட்சிகள் கூறும் வார்த்தைகள் எல்லாம் கபட நாடகமே என்றும், வயதானவர் செல்வதற்கு ஒரு பேருந்து கூட இல்லை என்றால் நாளை அவசர தேவைக்கு உயிருக்கு ஆபத்தான சூழலும் உருவாகும் எனவும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மூதாட்டி கால் கடுக்க நடந்து செல்லும் வீடியோ :