Mahindra BE 6e & XEV 9e Launch Function (Photo Credit: Team LatestLY)

நவம்பர் 26, மகேந்திரா சிட்டி (Automobile News): மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு, உலகளவில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகளை ஏற்படுத்தி, வாகன உற்பத்தி, மென்பொருள், ஊடகத்துறை, எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி என பலதுறைகளில் சாதனை புரிந்து வரும் நிறுவனம் மகேந்திரா குழுமம் (Mahindra Groups). இந்நிறுவனத்தின் கார்களுக்கு (Mahindra Car) உலகளவில் மிகப்பெரிய வரவேற்புகளும் உண்டு. நீடித்த ஸ்திரத்தன்மையுடன் கொண்ட தரம், பாதுகாப்பு வசதி என பல அம்சங்களால் மக்களால் அதிகம் விரும்பப்படும் கார்களில் ஒன்றாகவும் மகேந்திரா இருக்கிறது.

மகேந்திராவின் புதிய கார் அறிமுகம்:

இந்நிலையில், இன்று மகேந்திரா நிறுவனம் தனது புதிய படைப்பான மகேந்திரா பி 6இ ரக கார்களை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் உள்ள மகேந்திரா சிட்டியில் இருக்கும் மகேந்திரா ஆய்வு மையத்தில் (Mahindra Reserarch Valley) மகேந்திரா பி 6இ (Mahindra Be 6e) மற்றும் மகேந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) கார் அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வின் முடிவில், இரண்டு கார்களும் வரும் ஜனவரி மாதம் முதல் விற்பனை தொடங்கி, பிப்ரவரி - மார்ச் மாதம் முதல் டெலிவரி செய்து இந்திய சாலைகளில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. How to Avoid Mobile Phone Heating: உங்களின் ஸ்மார்ட்போன் அதிகம் சூடு ஆகிறதா? இந்த டிப்ஸை முயற்சித்து பாருங்க.!

சிறப்பம்சங்கள் சுருக்கமாக:

எலக்ட்ரானிக் வாகனங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மகேந்திரா குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ற, முழு அளவிலான பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய காரை வழங்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு, அதற்கேற்ப தனது பணியாளர்கள் உதவியுடன் தனது படைப்பை வெளிப்படுத்தி இருக்கிறது. அதன்படி, தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரண்டு ரக வாகனமும், முழு அளவிலான பேட்டரி பாதுகாப்பு, ஆட்டோ பார்க்கிங் வசதி, மினி திரையரங்கம்போன்ற ஒலி வடிவமைப்பு, 10 டன் அளவிலான சேதத்தையும் தாங்கும் திறன் என பல அம்சங்களை கொண்டுள்ளது.

பேட்டரி, பிற பாதுகாப்பில் கவனம் செலுத்திய மகேந்திரா:

இன்றளவில் பேட்டரி கார்கள் அதிகளவில் அறிமுகம் செய்யப்பட்டாலும், அதன் மீதான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிறது. அவ்வாறான விஷயங்களுக்கு தனது படைப்பின் மூலமாக பதில் வழங்கியுள்ள மகேந்திரா, தனது காரை மிகக்கவனமாக வடிவமைத்து இருக்கிறது. காருக்கு அடிபகுதியில் பேட்டரியை வைத்துள்ள மகேந்திரா, அதில் நீர் புகாத தன்மையை உபயோகம் செய்துள்ளனர். நீருக்குள் இருந்தாலும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை பேட்டரிக்கு ஒன்றும் ஆகாது. சுமார் 1000 டிகிரி செல்ஸியஸ் சூழலிலும், பேட்டரி 3 நிமிடங்கள் வரை இருந்தாலும் வெடிக்காது.

மஹிந்திரா பி 6இ:

எதிர்பாராத விபத்திலும், பயணிகள் பாதுகாப்பு:

ஒருவேளை எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படும் பட்சத்தில், பேட்டரிக்கு செல்லும் மின்னிணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்பட்டு, பேட்டரி வெடிக்கும் ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. வாகன இயக்கம், சார்ஜிங் போன்ற விஷயங்களில் பேட்டரி தீப்பிடிக்கும் வாய்ப்புகள் கண்டறியப்பட்டு, அவை தொழில்நுட்ப ரீதியாக சரிசெய்து கார் வடிவமைத்து விற்பனைக்கு தயாராகி இருக்கிறது. அதேபோல, மாயா (MAIA) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் உபயோகம் செய்யப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 6 ஏர்பேக் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. Nissan Layoffs: ஆயிரம் பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த நிசான்; அதிர்ச்சியில் ஆடிப்போன ஊழியர்கள்..!

மஹிந்திரா பி 6இ ஒன் (Mahindra BE 6e One Model):

59 kWh பேட்டரி திறன், 140 KW டிசி சார்ஜர் வாயிலாக 20 நிமிடத்தில் 20% முதல் 80% வரை சார்ஜ் ஏற்றும் திறன், 170 kW க்ளாஸ் பவர், எலக்ட்ரிக் பவர் ஸ்டிரியரிங் (Electric Power Steering), குறைந்த அளவு சேதமாகும் வகையிலான டயர் வடிவமைப்பு, பந்தய மாதிரியிலான ஓட்டுநர் இருக்கை, ஓட்டுனருக்கு அருகில் இரண்டு திரைகள், குவால்காம் ஸ்னாப்ட்ரங்கன் சிப்செட், 5ஜி கனெக்டிவ் வசதி, தானியங்கு வசதியில் இயங்கும் ஓளி அமைப்புகள் என பல அம்சங்கள் இருக்கிறது. இதன் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.18 இலட்சம் முதல் நிர்ணயிக்கப்பட்டு, சந்தையில் ரூ.20.36 இலட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ ஒன் (Mahindra XEV 9e One):

4789 mm நீளத்துடன், 59 Kwh பேட்டரி திறன், 20 நிமிடங்களில் 20% முதல் 80% வரை சார்ஜ் ஏற்றும் வசதி, 170 kW க்ளாஸ் பவர், எலக்ட்ரிக் பவர் ஸ்டியரிங், பூஸ்ட் உட்பட மாறுபட்ட டிரைவிங் அமைப்புகள், 6 இடங்களில் ஏர்பேக், டிஸ்க் பிரேக் அமைப்புகள், தானியங்கு வகையில் செயல்படும் பிரேக் அமைப்புகள், ஓட்டுனரின் நிலையை கண்காணிக்கும் ஏஐ தொழில்நுட்பம், குவால்கம் ஸ்நாப்ட்ரகன் சிப்செட், வயர்லெஸ் கார்ப்லே, 5ஜி கனெக்டிங் வசதி, ஓடிடி செயலிகள், சிறந்த ஒலி அமைப்பு, தானியங்கு முறையில் செயல்படும் ஒளி அமைப்புகள் போன்ற பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.21.90 இலட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.23.59 இலட்சமாக விலையில் சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

மிகசிறந்த படைப்பு:

இவற்றில் மஹிந்திரா பி 6இ கார், ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ இலக்கை பயணிக்கும். 0 ல் இருந்து 100 கிமீ வேகத்தை 6.7 நொடிகளில் எட்டிவிடும். கேபின் வடிவமைப்பு ஓட்டுநர் மற்றும் பிற பயணிகளுக்கு மிகசிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில், இடபங்களிப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய சாலைகளில் கவர்ச்சிகரமான, கட்டுக்கடங்கா காளைபோல வலம்வரவுள்ள மகேந்திரா பி 6இ மற்றும் எக்ஸ்இவி குறைந்தபட்சம் ரூ.20 இலட்சம் முதல் விற்பனை செய்யப்படுகிறது. செலவானாலும் பிரச்சனை இல்லை, நல்ல காராக, தரமானதாக, பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய காராக இருக்க வேண்டும் என நினைப்போருக்கு மகேந்திரா தனது மகிச்சிறந்த படைப்பை வழங்கி இருக்கிறது.

மகேந்திரா கார் அறிமுக நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட காணொளி உங்களின் பார்வைக்கு:

மகேந்திரா எக்ஸ்இவி 9இ வாகனத்தின் அறிவிப்பு:

மாயா - இது மகேந்திராவின் ஏஐ: