Google Doodle on 03 Oct 2024 (Photo Credit: google.doodle.com)

அக்டோபர் 03, கலிபோர்னியா (Technology News): ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பை 2024 (2024 ICC Women’s T20 World Cup) ஆட்டம் இன்று முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. அக்.03 ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் ஆட்டம், அக்.20 அன்று நிறைவு பெறுகிறது. வங்கதேசத்தில் நடைபெறவிருந்த போட்டிகள், அங்கு நிலவிய உள்நாட்டு பிரச்சனையால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் 10 அணிகள் மோதிக்கொள்கின்றன.

10 அணிகளின் விபரம்:

கடந்த 2009ம் ஆண்டு முதல் ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பை போட்டி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் முதலாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஆட்டம், தொடர்ந்து பிற நாடுகளில் அடுத்தடுத்து நடக்கிறது. கடந்த 2023 மகளிர் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணி தட்டிச்சென்ற நிலையில், இந்த ஆண்டு ஒவ்வொரு அணிகளுக்கும் இடையே கடுமையான பலப்பரீட்சை நடக்கிறது. வங்கதேசம், ஆஸ்திரியா, இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தான், ஸ்காட்லாந்த்து, இலங்கை அணிகள் இப்போட்டியில் பங்கெடுத்துள்ளன. Pregnancy Gadgets: கர்ப்பமாக 🤰 இருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான அசத்தல் சாதனங்களின் 💁‍♀️ முழு லிஸ்ட் இதோ..! 

வெற்றிபெறும் அணிக்கு பரிசுத்தொகை:

அமீரகத்தில் உள்ள ஷார்ஜா, துபாயில் இருக்கும் கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ள ஆட்டத்தில், வெற்றி அடையும் அணிக்கு 2,340,000 அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும். ரன்னர், செமி பைனல் வரை கலந்துகொள்ளும் அணிகள் என மொத்தமாக இப்போட்டியில் பங்கெடுக்கும் அணிகளுக்கு வெவ்வேறு வகைகளில் 7,958,080 அமெரிக்க டாலர் தொகை வழங்கப்படுகிறது.

இந்திய அணி போட்டியிடும் விபரம்:

இதில் இந்திய அணி அக்.04 அன்று நியுசிலாந்துக்கு எதிராகவும், அக்.06 அன்று பாகிஸ்தானுக்கு எதிராகவும், அக்.09 அன்று இலங்கைக்கு எதிராகவும், அக்.13 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் நடைபெறுகிறது. அக்.20 அன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த ஆட்டங்களை இந்திய மக்கள் அனைவரும் டிஸ்னி ஹாட்ஸ்டார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

கூகுளின் டூடுல்:

இந்நிலையில், கூகுள் நிறுவனம், ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை ஆட்டம் தொடங்குவதை முன்னிட்டு, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், அந்த செய்தியை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த டூடுல் உங்களின் பார்வைக்கும் இணைக்கப்படுகிறது.

கூகுளின் சிறப்பு டூடுல் இதோ உங்களுக்காக: