Mahindra Electric Origin SUV (Photo Credit: @TNDIPRNews X / @mahindraesuvs X)

ஜனவரி 13, மகேந்திரா சிட்டி (Automobile News): மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு, உலகளவில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகளை ஏற்படுத்தி, வாகன உற்பத்தி, மென்பொருள், ஊடகத்துறை, எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி என பலதுறைகளில் சாதனை புரிந்து வரும் நிறுவனம் மகேந்திரா குழுமம் (Mahindra Groups), சமீபத்தில் மகேந்திரா எலக்ட்ரானிக் வாகனத்தை அறிமுகம் செய்தது. எக்ஸ்இவி 9இ & பிஇ 6இ ரக கார்கள் நீடித்த ஸ்திரத்தன்மையுடன் கொண்ட தரம், பாதுகாப்பு உட்பட பல அம்சங்களுடன், ஏஐ தொழில்நுட்பத்தையும் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள மகேந்திரா சிட்டி, மகேந்திரா ஆய்வு மையத்தில் (Mahindra Reserarch Valley) மகேந்திரா பி 6இ (Mahindra Be 6e) மற்றும் மகேந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) கார்கள் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் உருவான மின்சார கார் என்ற பெருமையையும் இதனால் மகேந்திரா கொண்டது. இந்த கார்கள் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதத்திற்குள் டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது (13 ஜனவரி 2025) அன்று முதற்கட்டமாக கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு, சோதனை ஓட்டமாக கார் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் கொடியசைத்து சோதனை ஓட்டத்தையும் தொடங்கி வைத்தார். Mahindra BE 6e & XEV 9e: எலெக்ட்ரிக் வாகனத்தில் புதிய பரிணாமம்.. மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்இவி 9இ, பி 6இ கார் அறிமுகம்.. விலை, தரம் எப்படி?.. அசத்தல் தகவல் உள்ளே.! 

தமிழ்நாடு முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்:

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், மாநில தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை டிஆர்பி ராஜா ஆகியோர், தமிழ்நாடு அரசின் சார்பில், மாநிலத்திற்குள் உற்பத்தி செய்யப்பட்டு பயனாளர்களுக்கு விற்பனைக்கு தயாராகியுள்ள மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்இவி 9இ & பிஇ 6இ ஆகிய கார்கள், வாடிக்கையாளர்களுக்கு சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் வழங்கும் நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்டனர். அதனைத்தொடர்ந்து, மகேந்திரா நிறுவனத்தின் காரில் சிறிது பயணம் செய்த முதல்வர், அதன் சிறப்பம்சங்களையும் கேட்டு தெரிந்துகொண்டார். மாநில அளவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில், புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கும் மகேந்திரா நிறுவன குழுவினருக்கு அவர் தனது வாழ்த்துக்களையும் பதிவு செய்தார். தமிழ்நாடு எலக்ட்ரானிக் வாகன உற்பத்தியில் மிகப்பெரிய பங்கை சிறப்பாக வெளிப்படுத்தி வருவதாக எடுத்துரைத்த முதல்வர், அதற்கான தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி மகிழ்ந்தார்.

மகேந்திரா பிஇ 6இ & எக்ஸ்இவி 9இ சிறப்பம்சங்கள் சுருக்கமாக (Mahindra BE 6e & XEV 9e):

பேட்டரி பாதுகாப்பு, ஏஐ தொழில்நுட்பத்துடன் ஆட்டோ பார்க்கிங் வசதி, மினி திரையரங்கம் போன்ற ஒலி வடிவமைப்பு, 10 டன் அளவிலான சேதத்தையும் தாங்கும் திறன், மாயா (MAIA) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், வாகன இயக்கம், சார்ஜிங் போன்ற விஷயங்களில் பேட்டரி தீப்பிடிக்கும் வாய்ப்புகள் கண்டறியப்பட்டு தீர்வுகாண தொழில்நுட்பம் உட்பட பல்வேறு விஷயங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 59 kWh பேட்டரி திறன், 140 KW டிசி சார்ஜர் வாயிலாக 20 நிமிடத்தில் 20% முதல் 80% வரை சார்ஜ் ஏற்றும் திறன் என தொழில்நுட்ப ரீதியாக மகேந்திரா நிறுவனம் தனது புதிய சாதனையை படைத்தது. இந்த கார்கள் ரூ.18 இலட்சம் முதல் ரூ.25 இலட்சம் வரை, அதன் மாடலுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ இலக்கை பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கார், 0-ல் இருந்து 100 கிமீ வேகத்தை 6.7 நொடிகளில் எட்டிவிடும் தன்மை கொண்டது ஆகும்.

மகேந்திராவின் பிஇ 6 ரக கார்:

தமிழ்நாட்டில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் மின்சார கார் சோதனை ஓட்டம் தொடக்கம்:

உலகத்தரம் வாய்ந்த ஹொழில்நுட்பத்துடன், மாநிலத்திலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மகேந்திரா நிறுவனத்திற்கு, அமைச்சர் டிஆர்பி ராஜா பாராட்டு:

கடந்த நவ.26, 2024 அன்று மகேந்திரா எக்ஸ்இவி 9இ & பிஇ 6இ அறிமுகம் செய்யப்பட்டபோது: