BMW i5 Flow NOSTOKANA: அனிமேஷனாகும் பாடி பேனல்.. பிஎம்டபிள்யூ ஐ5 ஃப்ளோ நோஸ்டோகனா கார் வெளியீடு..!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ ஐ5 ஃப்ளோ நோஸ்டோகனா கார் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.
மார்ச் 07, புதுடெல்லி (New Delhi): வழக்கமான கார்களைக் காட்டிலும் மிக அதிக தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய கார் மாடலாக, தற்போது பிஎம்டபிள்யூ ஐ5 ஃப்ளோ நோஸ்டோகனா (BMW i5 Flow NOSTOKANA) கார் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் சிறப்பே அதன் பேனல் தானாம். அவை மின்சார அனிமேஷன் வசதிக் கொண்ட பேனல்கள் ஆகும். தெற்கு ஆப்பிரிக்கா பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் டிசைனே இந்த பேனல்கள் பிரதிபலிக்கும். PM Modi Congratulates Pakistan's PM Shehbaz Sharif: பாகிஸ்தானில் 2-வது முறையாக பிரதமரான ஷெபாஷ் ஷெரீப்... பிரதமர் மோடி வாழ்த்து..!
தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற கலைஞரான எஸ்தர் மஹ்லாங்குவின் கை வண்ணத்தினாலேயே இந்த கலை ஓவியம் பிஎம்டபிள்யூ காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. பிஎம்டபிள்யூ ஐ5, ஓர் எலெக்ட்ரிக் செடான் கார் மாடல் ஆகும். ஃப்ரீஸ் லாஸ் ஏஞ்ஜல்ஸ்லேயே (Frieze Los Angeles) இந்த கார் வெளியீடு செய்யப்பட்டது.
பிஎம்டபிள்யூ ஐ5 எலெக்ட்ரிக் கார் உலக சந்தையில் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஐ5 இ-டிரைவ்-40 மற்றும் ஐ5 எம்60 ஆகியவையே அவை ஆகும். பிஎம்டபிள்யூ ஐ5 ஓர் ஃபுல் சார்ஜில் 475 கிமீட்டர் ரேஞ்ஜை தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.