ஜனவரி 13, லாஸ் ஏஞ்சல்ஸ் (World News): அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள ஏராளமான பகுதிகள் காட்டுத் தீயால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் தொடங்கிய காட்டுத் தீ, அடுத்தடுத்து பலமான காற்று வீசியதால் வேகமாக மற்ற பகுதிகளுக்கு பரவ தொடங்கியது. பொதுமக்கள் அனைவரும் ஹாலிவுட் ஹில்ஸ் உட்பட பல முக்கியமான பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 53 ஆயிரம் பேர் ஏற்கனவே அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கூடுதலாக, 166,000 பேருக்கு வெளியேற வேண்டிய நிலை குறித்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்:
கிட்டத்தட்ட அங்கே 4 லட்சம் கோடி ரூபாய்க்கு நாசம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக பாலிசேட்ஸ் தீ அதாவது பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ மிக மோசமாக அமைந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகிலுள்ள கடலோர நிலப்பரப்பு ஆகும் இது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் அதிகமாக வசித்து வரும் பகுதிகளிலும் தீ பரவி வருவதால், பிரபலங்கள் பலரும் தங்களின் சொந்த வீடுகளை இழந்துள்ளனர். இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்து உள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Delta Air Lines: விமானத்தில் திடீர் எஞ்சின் கோளாறு., 200 பேரின் அதிஷ்டம்: உயிரை கையில் பிடித்து தப்பித்த மக்கள்.!
12,000க்கும் மேற்பட்டவீடுகள், வெளிப்புற கட்டுமானங்கள், கொட்டகைகள், மொபைல் வீடுகள் மற்றும் கார்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. இதனால் இழப்புகள் இதுவரை $135 பில்லியனைத் தாண்டிவிட்டதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட அங்கே 4 லட்சம் கோடி ரூபாய்க்கு நாசம் ஏற்பட்டு உள்ளது. நகரில் இருக்கும் மக்கள் அனைவரும் கட்டாயம் வெளியேற வேண்டும் என்ற உத்தரவையும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கியுள்ளனர். மக்கள் தங்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு பயணிக்கின்றனர். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். 1000 தீ அணைப்பு வாகனங்களும், 32 ஹெலிகாப்டர்களும், 8,500 வீரர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் தொடரும் காட்டுத்தீ (Deadly Los Angeles wildfires):
With almost no rain for eight months, hillsides and backyards were bone dry, primed to burn. Investigators are still trying to determine how the fires started. https://t.co/x5Xbn95LPT pic.twitter.com/Fvg7NIJkX7
— 60 Minutes (@60Minutes) January 13, 2025