Oscars 2025 Winners List (Photo Credit: @PopCultBandit_x X)

மார்ச் 03, லாஸ் ஏஞ்சல்ஸ் (Cinema News): அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் உள்ள டால்பி தியேட்டரில் 97வது ஆஸ்கர் விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், 2024ஆம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சியை ஏமி விருது வென்ற தொலைக்காட்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான கெனைன் ஓ பிரைன் முதன்முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். Oscars 2025: 97வது ஆஸ்கர் விருது விழா; வரலாறு படைத்த கறுப்பின ஆடை வடிவமைப்பாளர்.. இதுவரை அறிவிக்கப்பட்ட விருதாளர்களின் பட்டியல் இதோ..!

2025 ஆஸ்கர் விருது வென்றவர்களின் பட்டியல்:

  • சிறந்த படம் - அனோரா
  • சிறந்த இயக்குனர் - சீன் பேக்கர் (அனோரா)
  • சிறந்த நடிகர் - அட்ரியன் பிராடி (தி ப்ரூடலிஸ்ட்)
  • சிறந்த நடிகை - மைக்கி மேடிசன் (அனோரா)
  • சிறந்த துணை நடிகர் - கீரன் கல்கின் (தி ரியல் பெயின்)
  • சிறந்த துணை நடிகை - ஜோ சல்டானா (எமிலியா பெரெஸ்)
  • சிறந்த சர்வதேச திரைப்படம் - ஐ எம் ஸ்டில் ஹியர்
  • சிறந்த ஒளிப்பதிவு - தி ப்ரூடலிஸ்ட்
  • சிறந்த மூல திரைக்கதை - சீன் பேக்கர் (அனோரா)
  • சிறந்த ஆடை அலங்காரம் - பால் டேஸ்வெல் (விக்டு)
  • சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஃப்ளோ
  • சிறந்த அனிமேஷன் குறும்படம் - ஷிரின் சோஹானி மற்றும் ஹொசைன் மொலேமி (இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ்)
  • சிறந்த முடி மற்றும் ஒப்பனை - தி சப்ஸ்டென்ஸ்
  • சிறந்த தழுவல் திரைக்கதை - கான்க்ளேவ்
  • சிறந்த திரைப்பட எடிட்டிங் - அனோரா
  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - விக்டு
  • சிறந்த இசை - தி ப்ரூடலிஸ்ட்
  • சிறந்த பாடல் - எல் மால் (எமிலியா பெரெஸ்)
  • சிறந்த ஆவணப்படம் - நோ அதர் லேண்ட்
  • சிறந்த ஆவணப்பட குறும்படம் - தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா
  • சிறந்த ஒலி - டூன்: பகுதி 2
  • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - டூன்: பாகம் 2
  • சிறந்த நேரடி அதிரடி குறும்படம் - ஐ எம் நாட் எ ரோபோ

    இந்த 97வது ஆஸ்கர் விருது விழாவில் 5 விருதுகளை 'அனோரா' திரைப்படம் வென்று அசத்தியுள்ளது. அடுத்ததாக, 3 விருதுகளை 'தி ப்ரூட்டலிஸ்ட்' திரைப்படம் வென்றுள்ளது.