ஜனவரி 09, லாஸ் ஏஞ்சல்ஸ் (World News): அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள ஏராளமான பகுதிகள் காட்டுத் தீயால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் தொடங்கிய காட்டுத் தீ, அடுத்தடுத்து பலமான காற்று வீசியதால் வேகமாக மற்ற பகுதிகளுக்கு பரவ தொடங்கியது. பொதுமக்கள் அனைவரும் ஹாலிவுட் ஹில்ஸ் உட்பட பல முக்கியமான பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் ஏற்கனவே அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். Israel Vs Turkey: இஸ்ரேலைக் குறி வைக்கும் துருக்கி.. தீவிரமாகும் இஸ்ரேல் ஹமாஸ் போர்.. !
வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்:
ஹாலிவுட் நட்சத்திரங்கள் அதிகமாக வசித்து வரும் பகுதிகளிலும் தீ பரவி வருவதால், பிரபலங்கள் பலரும் தங்களின் சொந்த வீடுகளை இழந்துள்ளனர். இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நகரில் இருக்கும் மக்கள் அனைவரும் கட்டாயம் வெளியேற வேண்டும் என்ற உத்தரவையும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கியுள்ளனர். மக்கள் தங்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு பயணிக்கின்றனர். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.