Oscars 2025 (Photo Credit: @SonuKum00171039 X | @ajmal786_khan X)

மார்ச் 03, லாஸ் ஏஞ்சல்ஸ் (Cinema News): அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் உள்ள டால்பி தியேட்டரில் 97வது ஆஸ்கர் விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், 2024ஆம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த நடிகர், நடிகையர், இயக்குநர், சிறந்த படத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சியை ஏமி விருது வென்ற தொலைக்காட்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான கெனைன் ஓ பிரைன் முதன்முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். Surya 45 Shooting: விறுவிறுப்புடன் ராமோஜி பிலிம் சிட்டியில் சூர்யா 45 படப்பிடிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்.. ஆர்ஜே பாலாஜி அறிவிப்பு.!

  • அந்தவகையில், ஜெஸ்ஸி ஐசன்பெர்க் இயக்கிய 'எ ரியல் பெயின்' படத்திற்காக நடிகர் கீரன் கல்கின் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார்.
  • சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை Wicked படத்தில் ஆடை வடிவமைப்பாளர் பால் தேஸ்வெல் (Paul Tazewell) வென்றார். இந்த ஆஸ்கர் விருதை வெல்லும் முதல் கருப்பின மனிதன் நான் தான் என உணர்ச்சிப்பூர்வமாக மேடையில் பேசினார்.
  • சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை 'FLOW' வென்றது. சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கார் விருதை 'இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ்' படத்திற்காக ஷிரின் சோஹானி மற்றும் ஹொசைன் மொலயேமி பெற்றுக்கொண்டனர்.
  • சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை Conclave படத்திற்காக பீட்டர் ஸ்ட்ராகன் (Peter Straughan) வென்றார். சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை அனோரா படத்திற்காக சீன் பேக்கர் வென்றார்.
  • சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை 'THE SUBSTANCE' திரைப்படம் பெற்றது.
  • சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது, I’M NOT A ROBOT குறும்படம் வென்றது. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸிற்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘டியூன் - பார்ட் 2’ திரைப்படம் பெற்றது.
  • சிறந்த ஒலிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை பார்ட் 2 திரைப்படம் வென்றது. சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது No Other Land ஆவணப்படம்.
  • எமிலியா பெரஸ் திரைப்படத்தின் 'எல் மால்' பாடலுக்காக கிளெமென்ட் டுகோல், கேமில் மற்றும் ஜாக் ஆடியார்ட் ஆகியோர் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளனர்.
  • சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘அனோரா’ திரைப்படம். சிறந்த எடிட்டிங்கிற்கான விருதை அனோரா படத்தின் எடிட்டர் ஷான் பேக்கர் பெற்றார்.