Rituraj Singh Passed Away: துணிவு திரைப்பட பிரபலம்... மூத்த நடிகர் மாரடைப்பால் காலமானார்..! சோகத்தில் திரையுலகினர்..!

துணிவு திரைப்படத்தின் வாயிலாக தமிழ் படத்தில் நடித்த மூத்த தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர், தனது 59 வயதில் இயற்கை எய்தினார். இவரின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Actor Rituraj Singh (Photo Credit: @NeerajRoyKumar X / YouTube)

பிப்ரவரி 20, கோட்டா (Cinema News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா சிசோடியா ராஜ்புத் குடும்ப பின்னணியை சேர்ந்த புகப்பெற்ற தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ரிதுராஜ் சிங் சந்திராவத் சிசோடியா என்ற ரிதுராஜ் சிங் (Rituraj Singh). கடந்த 1989ல் வெளியான இன் அன்னி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ் என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர், தற்போது மூத்த தொலைக்காட்சி நடிகர்களில் ஒருவராகவும் இருக்கிறார். Apple iPhone10 Years Revenue: 10 ஆண்டுகளில் 1.65 ட்ரில்லியன் டாலர் வருமானம் ஈட்டி அசத்திய ஆப்பிள்; ஐபோன் விற்பனையில் மாபெரும் சாதனை.! 

துணிவில் இடம்பெற்ற நடிகர்: தற்போது 59 வயதாகும் நடிகர் ரிதுராஜ் சிங், பல தொலைக்காட்சி, வெப்செரிஸ் தொடர்களில் நடித்து அசத்தி இருக்கிறார். கடந்த 2023ல் எச்.வினோத் இயக்கத்தில், அல்டிமேட் சூப்பர்ஸ்டார் தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் சாதனை படைத்த துணிவு திரைப்படத்தில், நடிகர் ரிதுராஜ் சிங் சுனில் துட்டா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வங்கிக்கொள்ளையில் தொடர்புடைய மூன்று நபர்களில், இவர் மூன்றாவது நபராக தோன்றி இருப்பார். Women Cheated by Lover: காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைத்துவிட்டேன்., ஆட்சியர் காலில் விழுந்து கதறிய இளம்பெண்.. கண்ணீர் சோகம்.! 

குடும்பமத்தினர் & திரையுலகினர் சோகம்: இந்நிலையில், இவர் மாரடைப்பால் இயற்கை எய்தியுள்ளார். இவரின் மரணம் குடும்பத்தினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹிந்தி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பெரும்பான்மையாக நடித்து வந்த சிங், முதலில் நடித்த தமிழ் திரைப்படம் துணிவு மட்டுந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement