Imman Annachi: குடும்பத்துடன் உயிர்தப்பிய இமான் அண்ணாச்சி.. தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது என்ன? திக் திக் நிமிடங்கள்.!

தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றபோது, திடீரென குறுக்கே புகுந்த மாடுகள் காரணமாக நடிகர் இமான் அண்ணாச்சியின் கார் விபத்தில் சிக்கியது.

Imman Annachi (Photo Credit: Wikipedia)

ஜனவரி 29, மதுரை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்வருபவர் இமான் அண்ணாச்சி (Imman Annachi). தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்ட இமான் அண்ணாச்சி, தற்போது வரை 100 க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரவேற்பு பெற்று இருக்கிறார். நெல்லை தமிழ் ஒட்டுமொத்த தமிழக அளவில் வரவேற்பை பெரும் நிலையில், அதனை வைத்து மக்கள் மத்தியில் இமான் அண்ணாச்சியாக அவர் அறியப்படுகிறார்.

மக்களால் அறியப்பட்ட இமான் அண்ணாச்சி:

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த "கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி திரைத்துறைக்குள் அறிமுகமானவர், சன் தொலைக்காட்சியில் வெளியான குட்டி சுட்டி, பிக் பாஸ் சீசன் 5 ஆகிய நிகழ்ச்சியிலும் பணியாற்றி மக்களின் கவனத்தை பெற்றார். நீர்ப்பறவை, மரியான், நையாண்டி, கோலி சோடா, கயல், ஜில்லா, பூஜை, காக்கி சட்டை, புலி ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஏரலை பூர்வீகமாக கொண்டவர், திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு, அக்கட்சிக்காக தேர்தல் நேரத்தில் பிரச்சாரங்களையும் முன்னெடுத்து வருகிறார். Hina Khan: புற்றுநோயிலிருந்து மீண்ட பிக்பாஸ் பிரபலம்.. காதலனின் கரத்தால் மறுஜென்மம்.. நடிகையின் பதிவு வைரல்.! 

விபத்தில் சிக்கிய கார்:

இந்நிலையில், இமான் அண்ணாச்சி சென்னையில் உள்ள தனது குடும்பத்தாருடன், நெல்லை நோக்கி சம்பவத்தன்று காரில் பயணம் செய்தார். இவர்கள் காரில் மதுரைக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருந்தபோது, திடீரென மாடு புகுந்துள்ளது. இதனால் மாடு மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் இமான் அண்ணாச்சி மற்றும் அவரின் குடும்பத்தினர் உயிர்தப்பினர். இந்த தகவல் தற்போது வெளியாகி, அவரின் ரசிகர்களை பதறவைத்துள்ளது. மேலும், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் கண்டறிய வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில், அதன் ஓரங்களில் மாடுகளை மேய்க்காத வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

சாதாரண கிராம சாலைகள் முதல் தேசிய நெடுஞ்சாலைகள் வரை ஆடு, மாடுகளை சாலையோரம் மேய்ப்பது தொடருகிறது. கால்நடை உரிமையாளர் தனது வருமானத்திற்காக அதனை மேற்கொள்கிறார் எனினும், சாலையில் அதனை அவிழ்த்து கண்டுகொள்ளாமல் விடுவது நல்லதல்ல.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement