Chiyaan 62 Update: சியான் விக்ரமின் படத்தில் இணைந்த நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா; அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு.!

வில்லன் கதாபாத்திரத்தில் அடித்து நொறுக்கி ரசிகர்களின் பெறாதவரை பெற்ற எஸ்.ஜே சூர்யா, விக்ரமின் 62வது படத்திலும் இணைந்து இருக்கிறார். இது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

SJ Surya Onboarding Chiyaan 62 (Photo Credit: @HR_Pictures / @Darnittdude X)

பிப்ரவரி 09, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சியான் விக்ரம், தனது 62 வது படத்தில் தற்போது நடிக்க தயாராகியுள்ளார். எச்.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, தற்காலிகமாக சியான் 62 (Chiyaan 62) என பெயரிடப்பட்டுள்ளது. எஸ்.யு அருண் குமார் இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் இப்படம் உருவாகிறது.

சியான் 62ல் இணைந்த எஸ்.ஜே சூர்யா (SJ Surya): படக்குழு படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையிலான நடிகர்களை தொடர்ந்து தேடி படத்தில் இணைத்து வரும் நிலையில், தற்போது நடிப்பின் அரக்கன் என்று ரசிகர்களால் வருணிக்கப்படும் எஸ்.ஜே சூர்யா விக்ரமுடன் இணைந்து பணியாற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை எச்.ஆர் பிக்சர்ஸ் தரப்பும் உறுதி செய்துள்ளது. Sivaganga Accident: தாயகம் திரும்பிய சில நாட்களில் இளைஞருக்கு நடந்த சோகம்; இருசக்கர வாகனம் - சரக்கு வேன் மோதி இருவர் பரிதாப பலி.! 

மார்ச்சில் தொடங்கும் படப்பிடிப்பு: நடிகர் எஸ்.ஜே சூர்யா சமீபத்தில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் அதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக அமைந்து இருக்கின்றன. இதனால் தற்போது விக்ரமுடன் எஸ்.ஜே இணைந்துள்ள படமும் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. மார்ச் மாதத்தில் படத்தின் பூஜை நடைபெற்று, படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

அடுத்தடுத்த படங்கள்: நடிகர் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பில் சரிபோதா சனிவாரம் (தெலுங்கு), இந்தியன் 2, கேம் சேஞ்சர், டி50 (தனுஷ் 50), லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. இதனுடன் தற்போது சியான் 62ம் இணைந்து இருக்கிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement