Disha Patani Bikini: வான் நிற உள்ளாடையில் கவர்ச்சி காட்சிதந்த திஷா பதானி; வெகேஷனில் மஜா செய்யும் நடிகையின் வைரல் கிளிக்ஸ் உள்ளே.!

இந்திய திரையுலகில் முக்கிய நடிகர்கள் & நடிகைகளாக இருப்போர், தங்களின் இன்பமான நேரங்களை வெளிநாட்டில் மகிழ்ச்சியாக சுற்றுலா சென்று செலவிட்டு வருகிறார்கள்.

Disha Padani (Photo Credit: Instagram)

டிசம்பர் 27, தாய்லாந்து (Cinema News): இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் திஷா பதானி (Disha Patani). கடந்த 2015ம் ஆண்டு தெலுங்கில் வெளியான லோஃபர் திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான நடிகைக்கு, எம்.எஸ் தோனியின் (M.S. Dhoni: The Untold Story) வாழ்க்கை வரலாற்று திரைப்படம் நல்ல அடையாளத்தை பெற்றுத்தந்தது. இந்த படத்தில் திஷா தோனியின் முன்னாள் காதலி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

கங்குவாவில் நடித்துள்ள திஷா: அதனைத்தொடர்ந்து, சீனத்திரைப்படமான குங் பு யோகா, ஹிந்தியில் பாகி 2, பாகி 3 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, பாபி டியோள், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, கோவை சரளா உட்பட பலர் நடிக்கும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானியும் நடித்து வருகிறார். இப்படம் தமிழில் திஷா நடிக்கும் முதல் திரைப்படம் ஆகும். Director Thankar Bachchan Anger Moment: "ஒவ்வொருத்தனும் கொலைகாரன் தான்" - ஆதங்கத்தில் பொங்கிய இயக்குனர் தங்கர் பச்சான்; நடந்தது என்ன?..! 

Disha Padani Beach Dress (Photo Credit: Instagram)

தாய்லாந்தில் இன்பசுற்றுலா: பிற ஹிந்தி நடிகைகளை போல, கவர்ச்சி விஷயத்தில் எல்லையில்லாத ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நடிகை திஷா பதானி தற்போது தாய்லாந்து நாட்டில் தனது சுற்றுலா (Disha Vacation) பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இவரும், ஹிந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, இந்தியாவெங்கும் வரவேற்பு பெற்ற நாகினி தொடரின் நாயகி மௌனி (Mouni Roy) ராயும் தங்களின் இன்பசுற்றுலாவை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

கடற்கரை பிகினி உடையில் போட்டோ: தோழிகள் இருவரும் அங்குள்ள வெவ்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு ஒன்றாக சென்று வருகின்றனர். இந்நிலையில், நடிகை திஷா பதானி தனது இன்பசுற்றுலா பயணத்தில், கடற்கரை பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவு அவரின் பின்தொடர்பாளர்களிடையே வரவேற்பை பெற்று, லைக்குகளை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by disha patani (paatni) 🦋 (@dishapatani)