ஆகஸ்ட் 05, சென்னை (Cinema News Tamil): தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தங்களது 20 வருட திருமண வாழ்க்கையை கடந்த ஆண்டு முடிவுக்கு கொண்டு வந்தனர். இதனிடையே அவ்வப்போது தங்களது மகன்களின் முக்கியமான நிகழ்வுகளில் மட்டும் இருவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்ட நிலையில், அவரவர்களின் வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணித்து வருகின்றனர்.
நடிகை மிருணாள் தாகூர் பிறந்தநாள் விழா :
இதனிடையே நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் குபேரா திரைப்படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் பெற்றது. அடுத்ததாக தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூரை காதலிப்பதாகவும், இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நடிகை மிருணாள் தாகூரின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி மும்பையில் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. Atlee Thanks to Shah Rukh Khan: ஷாருக்கானின் ஜவான் படத்துக்கு தேசிய விருது: அட்லீ கொண்டாட்டம்.!
நடிகையுடன் டேட்டிங்கில் நடிகர் தனுஷ் :
இதில் பல்வேறு நடிகை, நடிகைகளும் கலந்து கொண்ட நிலையில் நடிகர் தனுஷும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். மேலும் மிருணாள் தாகூர் - அஜய் தேவ்கன் நடித்த 'சன் ஆஃப் சர்தார்' படத்தின் பிரீமியர் காட்சியும் மும்பையில் திரையிடப்பட்டது. அப்போது தனுஷின் பக்கம் சாய்ந்த நடிகை மிருணாள் அவரிடம் ஏதோ கூறினார். இதுகுறித்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த நெட்டிசன்கள் "மிருணாள் தாகூருடன் தனுஷ் டேட்டிங்கா?" என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். மேலும் சமீபகாலமாகவே இருவரும் இணைந்து பல இடங்களுக்கும் செல்வதாகவும் கூறுகின்றனர். கடந்த மாதம் நடிகர் தனுஷின் 'தேரே இஷ்க் மே' படப்பிடிப்பின் நிறைவு பார்ட்டியில் மிருணாள் தாகூர் கலந்து கொண்டதாலும், இட்லி கடை படத்தின் பாட்டிற்கு குதூகல நடனமாடியதாலும் இவ்வாறு கூறி வருகின்றனர்.
பார்ட்டி வீடியோவை பகிர்ந்து கேள்வு எழுப்பும் நெட்டிசன்கள் :
Dhanush and Mrunal Thakur are dating? pic.twitter.com/ItWYJdsm8a
— Aryan (@Pokeamole_) August 3, 2025