செப்டம்பர் 18, மும்பை (Cinema News): இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கிய 'கல்கி 2898 கி.பி' படத்தின் தொடர்ச்சியில் நடிகை தீபிகா படுகோனே (Actress Deepika Padukone) நடிக்க மாட்டார் என தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இயக்குநர் நாக் அஷ்வின் சமீபத்திய பேட்டியில், எல்லாம் சரியாக நடந்தால் இந்த 2025ஆம் ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார். இந்நிலையில், 'கல்கி 2898AD' (Kalki2898AD) படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனே, எதிர்பாராத சூழ்நிலைகளால் 2ஆம் பாகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. TTF Vasan Marriage: டிடிஎஃப் வாசனுக்கு திடீர் திருமணம்.. மாமா மகளை கரம்பிடித்தார்.!
தீபிகா படுகோனே விலகல்:
தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், முதல் படத்தின் தயாரிப்பின் போது தீபிகா படுகோனுடன் நீண்ட காலம் பணியாற்றிய போதிலும், அவருடன் ஒரு கூட்டணியை அமைக்க முடியவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கல்கி 2898AD இன் வரவிருக்கும் தொடர்ச்சியில் தீபிகா படுகோனே நடிக்க மாட்டார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். முழுவதுமாக பரிசீலித்த பிறகு, நாங்கள் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். முதல் படத்தை உருவாக்கும்போது, நீண்ட பயணம் இருந்தபோதிலும், எங்களால் ஒரு கூட்டணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. மேலும், அவரது எதிர்கால படைப்புகள் சிறப்பாக அமைய நாங்கள் வாழ்த்துகிறோம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
This is to officially announce that @deepikapadukone will not be a part of the upcoming sequel of #Kalki2898AD.
After careful consideration, We have decided to part ways. Despite the long journey of making the first film, we were unable to find a partnership.
And a film like…
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) September 18, 2025